எஸ். இராகவானந்தம்

எஸ். இராகவானந்தம் (1917–1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும், அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளாரும் ஆவார். 1977, 1980இல் அமைத்த ம. கோ. இராமச்சந்திரனின் அமைச்சரவைகளில் தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தார்.[1][2][3] 1968, 1977 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எஸ். இராகவானந்தம்
தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர்
பதவியில்
9 ஜூன் 1980 – 15 நவம்பர் 1984
முதலமைச்சர்ம. கோ. இராமச்சந்திரன்
பின்னவர்கே. ஏ. கிருஷ்ணசாமி
பதவியில்
30 ஜூன் 1977 – 17 பிப்ரவரி 1980
முதலமைச்சர்ம. கோ. இராமச்சந்திரன்
முன்னையவர்க. இராசாராம்
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
2 ஆகஸ்ட் 1977 – 1 நவம்பர் 1986
பதவியில்
1 மார்ச் 1968 – 19 ஆகஸ்ட் 1971
4வது அஇஅதிமுக பொதுச்செயலாளர்
பதவியில்
14 மார்ச் 1985 – 16 அக்டோபர் 1986
முன்னையவர்ப. உ. சண்முகம்
பின்னவர்ம. கோ. இராமச்சந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக (1990-1999)
(1972 க்கு முன்)
பிற அரசியல்
தொடர்புகள்
அஇஅதிமுக
(1972-1990)

அரசியல் வாழ்க்கை

தொகு

ராகவானந்தம் 1968 முதல் 1971 வரை திமுக பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[4][5] 1972ல் திமுக ம.கோ.ராவை நீக்கியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம். அந்தக் கோபத்தில் தனது எம்.எல்.சி. பதவியை இவர் ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது. ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார். ம.கோ.ராவிற்கு அடுத்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ராகவானந்தம் 1977 மற்றும் 1980 இல் எம்ஜிஆர் அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சரானார். ஆரம்ப காலத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ம.கோ.ரா, முதல்வரானதும் பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம் ஆகியோருக்கு வழங்கினார். இவர்களுக்கு அடுத்து இவர்களின் சகாவான ராகவானந்திற்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார். இவர் அந்த பதவியில் 1985-1986 வரை இருந்தார். 1988ல் கட்சி பிளவுபட்ட பிறகு, இவர் அதிமுக ஜா(ஜானகி) அணியின் துணை பொதுச்செயாலாளராகவும் பதவி ஆற்றினார்.[6] 1989 பிப்ரவரியில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஐக்கியமான பிறகு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1990ல் மீண்டும் திமுகவில் இணைந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. REVIEW OF THE WORK TRANSACTED BY THE SEVENTH TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY 1980-84 (PDF), சென்னை: தமிழ்நாடு அரசு
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  3. https://www.assembly.tn.gov.in/archive/6th_1977/06_03.pdf
  4. TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUADRENNIAL REVIEW 1967-70 (PDF), சென்னை: தமிழ்நாடு அரசு, 1971
  5. TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUINQUENNIAL REVIEW 1971-76 (PDF), சென்னை: தமிழ்நாடு அரசு, 1977
  6. "Statenotes: Making Insinuations" (in en-IN). indiatoday. 1988-04-30. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19880430-xyz-769085-2013-09-30. 
  7. "Jayalalitha irks partymen" (in en-IN). indiatoday. 1990-01-31. https://www.indiatoday.in/magazine/nation/story/19900131-jayalalitha-irks-partymen-812320-1990-01-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._இராகவானந்தம்&oldid=3811472" இலிருந்து மீள்விக்கப்பட்டது