தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998
இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு- 1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன.
- 1996 நாடாளுமன்றத்தேர்தலுக்கு பின் அமைந்த ஜனதா தளம் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி இரண்டாண்டுகளில் கவிழ்ந்தது.
- அதற்கு காரணம் ஜனதா தளம் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஆட்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிசன் வெளிவந்தது அதில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தலையீடு இல்லாமல் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தற்கொலை படையினர் கொன்றிருக்க முடியாது. என்று அவ்வறிக்கையில் திட்டவட்டமாக கூறியதையடுத்து.
- பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்த திமுக அமைச்சரவை மந்திரிகள், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஐக்கிய முன்னணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
- அந்த கொரிக்கையை ஏற்க்க பிரதமர் ஐ. கே. குஜ்ரால் மறுத்ததால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி விலக்கிக் கொண்டதால்.
- பிரதமர் ஐ. கே. குஜ்ரால் தலைமையிலான ஜனதா தளம் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கவிழ்ந்தது.
- புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன.
- இதனால் தமிழகத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களுக்கு இரண்டாண்டு ஆட்சியில் நல்ல செல்வாக்கு இருந்த போதிலும் ராஜீவ் காந்தி மரணத்தில் கருணாநிதிக்கு தொடர்பு உள்ளதாக கூறி ஜெயின் கமிஷன் விசாரணை தமிழக மக்களிடையே திமுகவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதால் எதிர்கட்சியான அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெற வைத்தனர்.
- மேலும் 1991 ஆம் ஆண்டு முதல் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் கருணாநிதி என்பதாலும் அதைவிட தற்போது வெளிவந்த ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் விசாரணை காங்கிரஸ் கட்சியினருக்கு மு. கருணாநிதியின் மீதுள்ள கடுமையான எதிர்ப்பினாலும், அதிருப்தியாலும் திமுக–காங்கிரஸ் கூட்டணி அக்காலகட்டத்தில் சேரவில்லை.
- மேலும் இத்தேர்தலில் அதுவரை தமிழகத்திற்கு எதிரான மதவாத கொள்கையுடைய பாஜக–அதிமுக உடன் கூட்டணி வைத்ததால் அக்கட்சி தலைவி ஜெயலலிதாவை நோக்கி கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
கட்சிகளின் கூட்டணி
தொகு- இத்தேர்தலில் தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன.
- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, தமிழக ராஜீவ் காங்கிரஸ், சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
- தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் தமாகா மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
- மூன்றாவது அணியில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் திருநாவுகரசரின் எம்.ஜி.ஆர்.அதிமுக, தா.பாண்டியனின் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
- சிபிஎம் இத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
முடிவுகள்
தொகுஅதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
அதிமுக | 18 | திமுக | 5 | காங்கிரஸ் | 0 |
பாஜக | 3 | தமாகா | 3 | சிபிஎம் | 0 |
மதிமுக | 3 | சிபிஐ | 1 | ||
பாமக | 4 | ||||
தமிழக ஜனதா கட்சி | 1 | ||||
தமிழக ராஜீவ் காங்கிரஸ் | 1 | ||||
மொத்தம் (1998) | 30 | மொத்தம் (1998) | 9 | மொத்தம் (1998) | 0 |
மொத்தம் (1996) | 39 | மொத்தம் (1996) | 0 | மொத்தம் (1996) | 0 |
தமிழக அமைச்சர்கள்
தொகுஇத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1][2]
இலாக்கா அமைச்சர்கள்
தொகுஅமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ரங்கராஜன் குமாரமங்கலம் | பாஜக | திருச்சி | மின்சாரம் மற்றும் நாடாளுமன்றம் |
தம்பித்துரை | அதிமுக | கரூர் | சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள் |
சேடப்பட்டி முத்தையா | அதிமுக | பெரியகுளம் | தரைவழிப் போக்குவரத்து |
வாழப்பாடி ராமமூர்த்தி | தமிழக ராஜீவ் காங்கிரசு | சேலம் | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு |
இணை அமைச்சர்கள்
தொகுஅமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
தலித் எழில்மலை | பாமக | சிதம்பரம் | சுகாதாரம் மற்றும் குடும்பநலம் |
கடம்பூர் ஜனார்த்தனம் | அதிமுக | திருநெல்வேலி | ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல் |
ஆர். கே. குமார் | அதிமுக | மாநிலங்களவை உறுப்பினர் | நிதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 12th Lok Sabha பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்