மு. தம்பிதுரை

தமிழக அரசியல்வாதி

மு. தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். 16-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 முதல் 1989 வரை நாடாளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009, 2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.க வின் நாடாளுமன்றக்குழு தலைவராக உள்ளார்.[2]

மு .தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர்
பதவியில்
13 ஆகத்து 2014 – 25 மே 2019
முன்னையவர்கரிய முண்டா
பின்னவர்காலி
பதவியில்
1985–1989
முன்னையவர்கோ. இலட்சுமணன்
பின்னவர்சிவ்ராஜ் பாட்டீல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவைகுழுத் தலைவர்
பதவியில்
மே 2009 - மே 2019
பிரதமர்
கரூர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர்
பதவியில்
மே 2009 – மே 2019
முன்னையவர்கோ.ச. பழனிச்சாமி
சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சர்
பதவியில்
மார்ச் 1998 – ஏப்ரல் 1999
தரைவழிப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
மார்ச் 1998 – ஏப்ரல் 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மார்ச்சு 1947 (1947-03-15) (அகவை 77)
கிருட்டிணகிரி, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பானுமதி தம்பிதுரை
முன்னாள் கல்லூரிசென்னை கிறித்துவக் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. "துணை சபாநாயகர் ஆனார் தம்பிதுரை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 ஆகத்து 2014. p. 1. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  2. "தினகரனில் தம்பிதுரை பற்றி". Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தம்பிதுரை&oldid=3752930" இலிருந்து மீள்விக்கப்பட்டது