தமிழ் மாநில காங்கிரசு
(தமாகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 1996 முதல் தமிழ்நாட்டில் ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஒரு கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் தமாகா இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]
வரலாறுதொகு
- 1996 சட்டமன்ற/நாடாளமன்றத் தேர்தலில் அன்றைய இந்திய பிரதமர் நரசிம்மராவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான சோனியா காந்தியும் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
- ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் அதிமுகவில் ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்கட்சியை போல் நடத்தி வந்ததாலும். ஜெயலலிதா தமிழக காங்கிரஸ் தலைவர்களை அவமதித்து பேசிவந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் அதிருப்தி அடைந்த நிலையில் எதிர் கட்சியான திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவேண்டும். என சோனியா காந்தியிடம் கொரிக்கை விடுத்தனர்.
- ஆனால் அதற்கு முந்தைய (1989-1991) வரையிலான திமுக ஆட்சி காலத்தில் நடந்த தேர்தலின் போது தனது கணவர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த தற்கொலை படைக்கு திமுகவில் கருணாநிதி உதவினார் என்ற காரணத்தால் திமுகவிடம் கடுமையான எதிர்ப்பை காட்டிய காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணிக்கு உடன்படாமல் தொடர்ந்து அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று கூறினார்.
- ஆனால் அந்த கூட்டணியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பெரும் தலைவர்கள் இணைந்து ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
- பின்பு நடந்த 1996 சட்டமன்ற/நாடாளமன்றத் தேர்தலில் திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆனது பத்திரிகை நிருபர் சோ அவர்கள் சிபாரிசால் அமைந்தது.
- இக்கூட்டணிக்கு சோ அவர்கள் வேண்டுக்கோளை ஏற்று அவரது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்தார். கருணாநிதி, ஜி. கே. மூப்பனார் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.
தேர்தல் வரலாறுதொகு
- தமாகா 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது.
- 1996ல் காலகட்டத்தில் மத்தியில் பாஜகவில் ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை இல்லாமல் வாஜ்பாய் பிரதமர் பதவியில் 13 நாட்களில் விலகியவுடன்.
- அடுத்த இடத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தமிழகத்தில் திமுக-தமாகா ஆதரவளித்தது.
- ஜனதா தளம் கட்சியில் பிரதமர் தேவ கவுடா அமைச்சரவையில் திமுக-தமாகா அங்கம் வகித்தது. இக்கட்சியின் ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர்.
- பின்பு ஜனதா தளம் கட்சியில் தேவ கவுடாவை ஐக்கிய முன்னணிக்கு வெளியில் இருந்த ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் சீதாராமன் கேசரி பிரதமர் பதவியில் இருந்து விலக கொரியதையடுத்து.
- ஜனதா தளம் கட்சியின் மற்றோரு மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் 1997ல் பிரதமர் ஆன போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததை அடுத்து அதில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணமான தற்கொலை படைக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உதவினார். என்ற காரணம் குறிப்பிடபட்டு இருந்ததால்.
- அதை காரணம் காட்டி ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த திமுக அரசு வெளியேற்றபடவேண்டும் என்று கூறினார்.
- ஆனால் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் திமுக அரசை வெளியேற்ற மறுத்ததால். காங்கிரஸ் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் 1998ல் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
- 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக-தமாகா கூட்டணி தொடர்ந்த போது போட்டியிட்ட 3 இடங்களில் மட்டுமே தமாகா வென்றது.
- அதன் பிறகு மத்தியில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுகவில் ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் மத்தியில் பாஜக ஆட்சி கவிழ்ந்ததால்.
- அடுத்து வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-பாஜகவுடன் இணைந்ததால் திமுக-தமாகா கூட்டணி முறிந்தது.
- 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவுடன், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு. அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
- 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதியில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.
- 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். 2002ல் தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.
மறுதொடக்கம்தொகு
- 2002 ஆண்டில் காங்கிரஸ் உடன் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் 2014 பாராளமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி தொல்வி அடைந்ததால். அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜி. கே. வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்தொகு
- 2016 சட்டமன்ற தேர்தலில் வைகோ அவர்களின் தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரசு இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு ஆதரவு கொடுத்த ஜி. கே. வாசன் இத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து தமாகாவும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தொல்வியடைந்தது.
- 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழநிசாமி தலைமையில் அமைந்த அதிமுக-பாஜகவின் தலைமையிலான தேஜகூவில் தமாகா இடம் பெற்றிருந்தது. இம்முறை ஜி. கே. வாசன் தனது தஞ்சாவூர் தொகுதியில் மக்களவை உறுப்பினர் ஆக தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிட்டு தொல்வி அடைந்தார். இம்முறை அதிமுக-பாஜக கூட்டணியில் மோடி அமைச்சரவையில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து கௌரவபடுத்தியது.
தேர்தல் நிலவரம்தொகு
ஆண்டு | பொதுத் தேர்தல் | பெற்ற வாக்குகள் | வென்ற இடங்கள் |
---|---|---|---|
1996 | 11வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 2,526,474 | 39 |
1996 | 11வது மக்களவை | 7,339,982 | 20 |
1998 | 12வது மக்களவை | 5,169,183 | 3 |
1999 | 13வது மக்களவை | 2,946,899 | 0 |
2001 | 12வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 1,885,726 | 23 |
2016 | 15வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 230,710 | 0 |
ஆதாரம்தொகு
- ↑ Vikatan Correspondent, தொகுப்பாசிரியர் (1 நவம்பர் 2014). மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/34230-.