மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)

மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)

மக்கள் நலக் கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, 2015 அக்டோபரில் ஏற்படுத்திய ஒரு அரசியல் கூட்டு இயக்கமாக மக்கள் நலக் கூட்டு இயக்கம் என்ற பெயரில் அமைந்தது.[1]

கூட்டணி வரலாறு

தொகு

தோற்றம்

தொகு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியின் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டியக்கம் எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி வெளியேறியது. இந்தக் கூட்டமைப்பு, தேர்தல் செயல்பாட்டுக்காக மக்கள் நலக் கூட்டணி என 2 நவம்பர் 2015 அன்று அதிகாரப்பூர்வமாக புது வடிவம் பெற்றது. தேர்தலுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனுக்காக மக்கள் நலக் கூட்டியக்கம் எனும் பெயரில் கூட்டமைப்பு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.[3][4].

குறிக்கோளும், எதிர்காலத் திட்டங்களும்

தொகு

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தல்; கூட்டணியில் ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "People's Welfare Front will be a political alliance on October 5". The Hindu. 3 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
  2. "மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது: வைகோ அறிவிப்பு". BBC தமிழ். 27 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2016.
  3. "மக்கள் நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு". தி இந்து (தமிழ்). 2 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
  4. "People's Welfare Front Becomes Electoral Alliance, Releases CMP". The New Indian Express. 2 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
  5. http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece

வெளியிணைப்புகள்

தொகு