மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிமதிமுக
நிறுவனர்வைகோ
பொதுச் செயலாளர்வைகோ
மக்களவைத் தலைவர்அ. கணேசமூர்த்தி
மாநிலங்களவைத் தலைவர்வைகோ
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணி1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016)
2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014)
3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009)
4)அதிமுகசிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011)
5)திமுககாங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி)
6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 544 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
தேர்தல் சின்னம்
பம்பரம்
இணையதளம்
mdmk.org.in
இந்தியா அரசியல்

தேர்தல் பங்களிப்பு தொகு

தேர்தல் வெற்றிகள் தொகு

வரிசை எண் நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு தொகுதிகள்
1 1998 சிவகாசி, திண்டிவனம், பழநி
2 1999 சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு
3 2004 சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி
4 2009 ஈரோடு
5 2019 ஈரோடு
வரிசை எண் 2006 சட்டமன்றத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல்
1 சிவகாசி சாத்தூர்
2 விருதுநகர் வாசுதேவநல்லூர்
3 வாசுதேவநல்லூர் மதுரை தெற்கு
4 திருமங்கலம் அரியலூர்
5 கம்பம்
6 தொண்டாமுத்தூர்

தேர்தல் சின்னம் தொகு

சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[1][2]

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள் தொகு

  • வைகோ - நிறுவன பொதுச்செயலாளர்
  • ஆடிட்டர் அர்ஜூனராஜ் - அவைத்தலைவர்
  • அ. கணேசமூர்த்தி - மூத்த நிர்வாகி
  • துரை வைகோ - முதன்மை செயலாளர்
  • மல்லை சத்யா - துணை பொதுச்செயலாளர்
  • செஞ்சி ஏ. கே. மணி - துணை பொதுச்செயலாளர்
  • ஆடுதுறை முருகன் - துணை பொதுச்செயலாளர்
  • ரொகையா பீவி சேக் அகமது -துணை பொதுச்செயலாளர்
  • தி. மு.இராசேந்திரன் -துணை பொதுச்செயலாளர்
  • வந்தியத்தேவன் - கொள்கை விளக்க அணி செயலாளர்
  • நெய்வேலி செந்திலதிபன் - பொருளாளர்
  • பால.சசிகுமார் - மாணவர் அணி மாநில செயலாளர்
  • பிரியக்குமார் - அமைப்புச்செயலாளர்
  • நன்மாறன் - செய்தி தொடர்பு செயலாளர்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு