சிவகாசி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று சிவகாசி மக்களவைத் தொகுதி. சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, சிறீவல்லிப்புத்தூர், இராசபாளையம் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கு வென்றவர்கள்தொகு

 • 1967 - ராமமூர்த்தி - சுதந்திராக் கட்சி
 • 1971 - ஜெயலட்சுமி - காங்கிரசு
 • 1977 - ஜெயலட்சுமி - காங்கிரசு.
 • 1980 - செளந்தரராஜன் - அதிமுக.
 • 1984 - செளந்தரராஜன் - அதிமுக.
 • 1989 - காளிமுத்து - அதிமுக.
 • 1991 - கோவிந்தராஜுலு - அதிமுக.
 • 1996 - அழகிரிசாமி - சிபிஐ
 • 1998 - வைகோ - மதிமுக
 • 1999 - வைகோ - மதிமுக
 • 2004 - ரவிச்சந்திரன் - மதிமுக


2004/14வது மக்களவை முடிவுதொகு

பொதுத் தேர்தல், 2004: சிவகாசி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக அ. ரவிச்சந்திரன் 469,072 56.44 +15.23
அஇஅதிமுக கண்ணன். P 304,555 36.64 +4.89
ஐஜத தீபா வேலன்டினா. T 27,130 3.26 n/a
சுயேட்சை வெங்கடேசன். K 10,156 1.22 n/a
வாக்கு வித்தியாசம் 164,517 19.79 +10.34
பதிவான வாக்குகள் 831,167 63.27 +0.41
மதிமுக கைப்பற்றியது மாற்றம் +15.23