விருதுநகர் மக்களவைத் தொகுதி
விருதுநகர் மக்களவைத் தொகுதி (Virudhunagar Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 34-ஆவது தொகுதி ஆகும். திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள் ஆகும்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
விருதுநகர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,484,256 |
சட்டமன்றத் தொகுதிகள் | 195. திருப்பரங்குன்றம் 196. திருமங்கலம் 204. சாத்தூர் 205. சிவகாசி 206. விருதுநகர் 207. அருப்புக்கோட்டை |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
தொகுமக்களவை | காலம் | உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
15 | 2009-14 | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
16 | 2014-19 | த. இராதாகிருஷ்ணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
17 | 2019-2024 | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
17 | 2024-தற்போது | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | பி. மாணிக்கம் தாகூர் | 3,85,256 | 36.28 | 7.49 | |
தேமுதிக | வி. விஜய பிரபாகரன் | 380,877 | 35.87 | 6.47 | |
பா.ஜ.க | ஆர். ராதிகா | 166,271 | 15.66 | New | |
நாதக | எஸ். கவுசிக் | 77,031 | 7.25 | 2.32 | |
நோட்டா | நோட்டா | 9,408 | 0.89 | 0.72 | |
வாக்கு வித்தியாசம் | 4,379 | 0.41 | 13.96 | ||
பதிவான வாக்குகள் | 1,054,634 | 70.22 | 2.19 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 7.49 |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுஇத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளரான அழகர்சாமியை 1,54,554 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | 6,216 | 4,70,883 | 43.81% | |
அழகர்சாமி | தேமுதிக | 1,274 | 3,16,329 | 29.43% | |
எஸ். பரமசிவ ஐயப்பன் | அமமுக | 582 | 1,07,615 | 10.01% | |
வி. முனியசாமி | மக்கள் நீதி மய்யம் | 314 | 57,129 | 5.32% | |
அருள்மொழிதேவன் | நாம் தமிழர் கட்சி | 449 | 53,040 | 4.94% | |
நோட்டா | - | - | 205 | 17,292 | 1.61% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுஇத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான த. இராதாகிருஷ்ணன், மதிமுக வேட்பாளரான வைகோவை 1,45,551 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | கூட்டணி | வாக்குகள் |
---|---|---|---|
த. இராதாகிருஷ்ணன் | அதிமுக | அதிமுக | 406,694 |
வைகோ | மதிமுக | பாஜக | 261,143 |
இரத்தினவேலு | திமுக | திமுக | 241,505 |
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | காங்கிரசு | 38,482 |
வாக்குப்பதிவு
தொகு2009 வாக்குப்பதிவு சதவீதம் [2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
77.38% | 74.96% | ↓ 2.42% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகு16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் மாணிக்கம் தாகூர், மதிமுகவின் வைகோவை 15,764 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | 3,07,187 |
வைகோ | மதிமுக | 2,91,423 |
கே. பாண்டியராஜன் | தேமுதிக | 1,25,229 |
மு. கார்த்திக் | பாரதிய ஜனதா கட்சி | 17,336 |
வி. கனகராஜ் | பகுஜன் சமாஜ் கட்சி | 8,198 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2024 Parliamentary Constituency 34 - VIRUDHUNAGAR (Tamil Nadu) Results". இந்தியத் தேர்தல் ஆணையம்.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)