மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் (Madurai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
மதுரை மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() மீனாட்சியம்மன் கோவில், மதுரையில் பக்தர்கள் | |
![]() அமைவிடம் தமிழ்நாடு, இந்தியா | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
தலைமையிடம் | மதுரை |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,741.73 km2 (1,444.69 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 30,41,038 |
• அடர்த்தி | 823/km2 (2,130/sq mi) |
மொழிகள் | |
• ஆதிகாரப்பூர்வம் | தமிழ் |
• மற்றவை | ஆங்கிலம், உருது, தெலுங்கு, சௌராட்டிரம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அஞ்சல் எண் | 625001 |
தொலைபேசிக் குறியீடு | 0452 |
வாகனப் பதிவு | TN-58,TN-59,TN-64[2] |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
பெரிய நகரம் | மதுரை |
பாலின விகிதம் | ♂-50.5% / ♀-49.5% |
கல்வியறிவு | 81.5% |
மக்களவை தொகுதி | 1 |
சட்டமன்றத் தொகுதி | 10 |
வரலாறுதொகு
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மாகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்தொகு
மதுரை மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களாகவும், 11 வருவாய் வட்டங்களாகவும், 51 உள்வட்டங்களாகவும், 665 வருவாய் கிராமங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.[3]
வருவாய்க் கோட்டங்கள்தொகு
மதுரை மாவட்டம் 4 வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை;
- மதுரை
- மேலூர்
- திருமங்கலம்
- உசிலம்பட்டி
வருவாய் வட்டங்கள்தொகு
இம்மாவட்டம் 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன
மக்கள்தொகைதொகு
இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 30,41,038. இதில் 15,28,308 பேர் ஆண்கள் மற்றும் 15,12,730 பேர் பெண்கள்.
மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | |
---|---|---|---|
மக்கள் தொகை | 30,41,038[4] | 15,28,308 | 15,12,730 |
கல்வியறிவு | 82 | 86.55 | 76.74 |
0-6 வயதுடைய குழந்தைகள் | 2,87,101 | 1,48,050 | 1,39,051 |
மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு | 823 |
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 27,60,502 (90.86%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 1,68,881 (5.56%), கிருஸ்துவர்கள் 97,711 (3.22%), மதம் குறிப்பிடாதோர் 8,602 (0.28%), சமணர்கள் 1,532 (0.05%), சீக்கியர்கள் 520, புத்த மதத்தினர் 199, மற்றவர்கள் 305 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[5]
உள்ளாட்சி & ஊராட்சி அமைப்புகள்தொகு
இம்மாவட்டம் மதுரை மாநகராட்சி தவிர, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள்[6], 13 ஊராட்சி ஒன்றியங்கள், 420 கிராம ஊராட்சிகள் என உள்ளாட்சி மற்றும் ஊரக அமைப்புகள் உள்ளது.[7]
மாநகராட்சி | நகராட்சி | பேரூராட்சி | ஊராட்சி ஒன்றியம் |
---|---|---|---|
அரசியல்தொகு
மதுரை மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும்; பத்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.[8]
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்தொகு
மதுரை மற்றும் அதனைச் சுற்றி மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஈர்ப்புகள்:
வழிபாட்டுத் தலங்கள்தொகு
- மீனாட்சியம்மன் கோயில்
- ஆதிசொக்கநாதர் கோயில்
- தென்திருவாலவாய் கோயில்
- இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
- செல்லத்தம்மன், கண்ணகி கோயில்
- பேச்சி அம்மன் கோயில்
- கூடல் அழகர் கோயில்
- மதனகோபால சுவாமி கோயில்
- திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
- பரங்கிநாதர் கோயில்
- அழகர் கோயில்
- பழமுதிர்சோலை
- வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
- முக்தீஸ்வரர் கோயில்
- திருவாப்புடையார் கோயில்
- பாண்டி கோயில்
- திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
- திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
- நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
- சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்
- சிக்கந்தர் தர்கா
- கோரிப்பாளையம் தர்கா
சுற்றுலாத் தலங்கள்தொகு
அருங்காட்சியகங்கள்தொகு
- காந்தி நினைவு அருங்காட்சியகம்
- சங்கத் தமிழ் காட்சிக் கூடம்
- அரசு அருங்காட்சியகம் (காந்தி நினைவு அருங்காட்சியகம்) வளாகம்
கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்தொகு
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
- மதுரை மருத்துவக் கல்லூரி
- மதுரை சட்டக் கல்லூரி
- தியாகராசர் பொறியியல் கல்லூரி
- மதுரைக் கல்லூரி
- அமெரிக்கன் கல்லூரி
- சௌராஷ்டிரா கல்லூரி
- பாத்திமா கல்லூரி
- லேடி டோக் கல்லூரி
- தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை
- சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை
- தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி
- தமிழ்நாடு இசையியல் கல்லூரி
- உலகத் தமிழ்ச் சங்கம்
- மதுரைத் தமிழ்ச் சங்கம்
போக்குவரத்துதொகு
வானூர்தி நிலையம்தொகு
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து துபாய், கொழும்பு வெளிநாட்டு நகரங்களுக்கும், மற்றும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பய் போன்ற இந்திய நகரங்களுக்கு நேரடி வானூர்திகள் உண்டு.
தொடருந்துதொகு
மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தொடருந்துகள் இருப்புப்பாதை வழியாக மதுரையை இணைக்கிறது.[9]
=பேருந்து நிலையங்கள்தொகு
- எம். ஜி. ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (மாட்டுத் தாவணி)
- பெரியார் பேருந்து நிலையம்.
- அண்ணா பேருந்து நிலையம். (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)
- ஆரப்பாளையம் பேருந்து நிலையம்.
சாலைகள்தொகு
தே நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் நாட்டின் அனைத்து நகரங்கள் சாலைகள் வழியாக மதுரையை இணைக்கிறது.
மாவட்ட ஆட்சியர்கள்தொகு
வ.எண் | நாள் முதல் | நாள் வரை | பெயர் | குறிப்பு |
00 | 1972 | ஆர். ஏ. சீத்தாராமதாஸ்[10] | ||
00 | 1985 | இரா. வரதராஜூலு[11] | ||
00 | ஆதிசேஷையா | |||
00 | ஐயர் | |||
00 | 2004 சூன் 2[12] | டாக்டர் பி. சந்திரமோகன் | ||
00 | 2004 சூன் 2[12] | டி. இராசேந்திரன் | ||
00 | ? | |||
00 | 2009 மே 28[13] | பி. சீதாராமன் | ||
00 | 2009 மே 27[14] | ? | என். மதிவாணன் | |
00 | 2010 ஏப்ரல் 18 [15] | தினேசு பொன்ராசு ஆலிவர் | பொறுப்பு (மாவட்ட வருவாய் அலுவலர்) | |
00 | 2010 ஏப்ரல் 18 [15] | 2011 மார்ச் 21 | சி. காமராசு[16] | |
00 | 2011 மார்ச்சு 22[17] | 2012 மே 23[18] | உ. சகாயம் | |
00 | 2012 மே 28[19] | 2013 சூன் 28 [20] | அன்சுல் மிசுரா | |
00 | 2013 சூலை 7[21] | 2016 சனவரி 21 [22] | இல. சுப்பிரமணியன் | |
00 | 2016 சனவரி 22 [22] | 2018 ஆகஸ்ட் 23 [23] | கே. வீரராகவராவ் | |
00 | 2018 ஆகஸ்ட் 24 [24] | 2019 ஏப்ரல் 28 [25] | எஸ்.நடராசன் | |
211 | 2019 ஏப்ரல் 28 [26] | 2019 சூன் 5[27] | ச. நாகராஜன் | |
212 | 2019 சூன் 5 | 2019 சூலை 1 | சாந்தகுமார் [28] | மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)[29] |
213 | 2019 சூலை 1 | 2019 அக்டோபர் 4 | த. சு. ராஜசேகர் [30] | |
214 | 2019 அக்டோபர் 14 | 2020 அக்டோபர் 30 | டி.ஜி.வினய் | |
215 | 2020 அக்டோபர் 30 | த. அன்பழகன் [31] |
இதையும் காண்கதொகு
ஆதாரங்கள்தொகு
- ↑ "District Census 2011". Registrar General & Census Commissioner, India (2011). மூல முகவரியிலிருந்து 5 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-30.
- ↑ "Registration Series Allotted to Regional Transport Offices". Government of Tamil Nadu, State Transport Authority. மூல முகவரியிலிருந்து 12 September 2012 அன்று பரணிடப்பட்டது.
- ↑ Madurai District Revenue Administration
- ↑ http://www.census.tn.nic.in/whatsnew/fig_glance.pdf%7C தமிழக அரசின் மக்கள் தொகை குறித்த சிறு குறிப்பு.
- ↑ Madurai District : Census 2011 data பார்த்த நாள்: நவம்பர் 26, 2015.
- ↑ மதுரை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
- ↑ மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்
- ↑ Elected Representatives of MADURAI DISTRICT
- ↑ http://indiarailinfo.com/arrivals/madurai-junction-mdu/790
- ↑ தமிழரசு;1972-03-16 பக்.96
- ↑ தமிழரசு 16-12-1985 பக்.34
- ↑ 12.0 12.1 http://www.sify.com/legal/fullstory.php?id=13489351
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article614756.ece
- ↑ https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=4541&PageId=
- ↑ 15.0 15.1 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-collector-of-madurai-takes-charge/article752589.ece
- ↑ http://www.dinamani.com/edition_madurai/article795495.ece
- ↑ http://www.dinamani.com/edition_madurai/article794234.ece
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article913080.ece
- ↑ http://news.chennaionline.com/chennai/Anshul-Mishra-assumes-office-as-Madurai-District-Collector/95c4374c-4192-468b-b228-25513f51a1aa.col
- ↑ https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=16852&PageId=
- ↑ http://timesofindia.indiatimes.com/city/madurai/L-Subramanian-takes-over-as-collector-of-Madurai-district/articleshow/20964273.cms
- ↑ 22.0 22.1 http://www.dinamani.com/tamilnadu/2016/01/21/9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article3237154.ece
- ↑ https://tamil.thehindu.com/tamilnadu/article24762401.ece
- ↑ https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/24225410/Natarajan-takes-charge-as-new-collector-of-Madurai.vpf
- ↑ https://minnambalam.com/k/2019/06/06/11
- ↑ https://minnambalam.com/k/2019/06/06/11
- ↑ https://minnambalam.com/k/2019/06/06/11
- ↑ https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/04144953/1037981/Madurai-Collector-3-IAS-Officers-TN-Govt-Order.vpf%7C
- ↑ https://minnambalam.com/k/2019/06/06/11
- ↑ மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு, தினமணி, 2019சூலை2
- ↑ மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார் டி.அன்பழகன், இந்து தமிழ் திசை 2020 10 30