மதனகோபால சுவாமி கோயில்
மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர், மதனகோபால சுவாமி என்ற பெயருடன் கையில் புல்லாங்குழலுடன், சத்தியபாமா – ருக்மணி சமேதராக அருள் புரிகிறார். மதுரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் தனியாக உள்ளன. தல விருட்சம் வாழை மரம் ஆகும்.[1].
மதனகோபால சுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°54′54″N 78°06′54″E / 9.9150°N 78.1149°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவிடம்: | மதுரை |
சட்டமன்றத் தொகுதி: | மதுரை மத்தி |
மக்களவைத் தொகுதி: | மதுரை |
ஏற்றம்: | 189 m (620 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | மதனகோபால சுவாமி |
தாயார்: | ருக்மணி, சத்தியபாமா |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, வசந்த உற்சவம், பாவை நோன்பு, திருக்கல்யாணம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், மதனகோபால சுவாமி கோயில் கற்றூண்களில் பல, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பிலடெல்பியா காட்சிக்கூடத்தில் ஒரு மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது.[2]
கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் ஆகியவை மதனகோபால சுவாமி கோயிலுக்கு மிகமிக அருகில் அமைந்துள்ள இரு கோயில்களாகும்.
பிற சன்னதிகள்
தொகு- நவநீதகிருஷ்ணன் சன்னதி
- சக்கரத்தாழ்வார் சன்னதி
தலச்சிறப்பு
தொகுஆண்டாளும் பெரியாழ்வாரும் ஒரு முறை திருவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், மதனகோபால சுவாமியை வழிப்பட்டுச் சென்றதாக இக்கோயில் தல புராணம் கூறுகிறது.
துணைக் கோயில்கள்
தொகுமதனகோபால சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் அமைந்த கோயில்கள்;
- ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை 625001
- வேங்கடமூர்த்தி அய்யனார் கோயில், அனுப்பானடி, மதுரை 625009
- சேவகபெருமாள் அய்யனார் கோயில் & வெங்கடஜலபதி கோயில், ஆலமரம் பேருந்து நிறுத்தம், அண்ணாநகர், மதுரை 625020
திருவிழாக்கள்
தொகு- கிருஷ்ண ஜெயந்தி
- இராம நவமி
- வைகுண்ட ஏகாதசி
- வசந்தோற்சவம்
- பாவை நோன்பு
- திருக்கல்யாணம்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுபரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்