மதுரை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,41,434
சட்டமன்றத் தொகுதிகள்188. மேலூர்
189. மதுரை கிழக்கு
191. மதுரை வடக்கு
192. மதுரை தெற்கு
193. மதுரை மத்தி
194. மதுரை மேற்கு

மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 32-ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறு சீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பின் கீழ், மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம், விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. மேலூர்
  2. மதுரை கிழக்கு
  3. மதுரை வடக்கு
  4. மதுரை தெற்கு
  5. மதுரை மத்தி
  6. மதுரை மேற்கு

இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்

இத்தொகுதியில் காங்கிரசு கட்சி 8 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ, திமுக மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -

{

16-ஆவது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.[1] இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
இரா. கோபாலகிருஷ்ணன் அதிமுக 4,54,167
வி. வேலுசாமி திமுக 2,56,731
சிவமுத்துகுமார் தேமுதிக 1,47,300
பாரத் நாச்சியப்பன் காங்கிரசு 32,143

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
77.48% 67.88% 9.60%

15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் மு. க. அழகிரி, சிபிஎம்மின், மோகனை, 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. க. அழகிரி திமுக 4,31,295
பொ. மோகன் சிபிஎம் 2,90,310
கே. கவிஅரசு தேமுதிக 54,419
தர்பார் இராஜா பகுஜன் சமாஜ் கட்சி 3,752
எசு. வேல்துரை சுயேட்சை 4,712

14-ஆவது மக்களவை தேர்தல் முடிவு

தொகு

பொ. மோகன் - சிபிஎம் - 4,14,433

ஏ. கே. போசு - அதிமுக - 2,81,593

வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bharathi Kannamma begins poll campaign". The Hindu Daily. 01 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 01 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மக்களவைத்_தொகுதி&oldid=3919311" இலிருந்து மீள்விக்கப்பட்டது