அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம்

அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் மண்டலம் (Arittapatti biodiversity heritage site), 2002ஆம் ஆண்டின் பல்லுயிர் சுழல் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தலமாக, அரிட்டாபட்டி-மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழலியல் மண்டலத்தை 22 நவம்பர் 2022 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.[1][2]இது மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், அரிட்டாபட்டி ஊராட்சியில் உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள மரங்கள் கொண்ட 7 தொடர் மலைக்குன்றுகள், என்றும் வற்றாத 200 சுனைகள், 72 குளங்கள், 3 தடுப்பணைகள் கொண்ட 193.21 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

அழகர்மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையே உள்ள அரிட்டாப்பட்டி-மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழலியல் மண்டலம், மேலூருக்கு மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரையிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது. [3]

பறவைகளும் விலங்குகளும்

தொகு

அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் மண்டலத்தில் உள்ள கழுகு இனங்களில் இந்திய பொறி வல்லூறு, சிற்றழல், ராஜாளி, பெரும் புள்ளி கழுகு, கருங்கழுகு, கொம்பன் ஆந்தை, பூமன் ஆந்தை, நீல பூங்குருவி, சருகு திருப்பி உள்ளிட்ட 275 வகைப் பறவைகள் உள்ளது. மேலும் 46 வகை வண்ணத்துப்பூச்சிகள், புள்ளி மான்கள், கடமான், நரி, காட்டுப்பன்றிகள், எறும்புத் திண்ணிகள், உடும்பு, பாம்பினங்கள், எண்ணவற்ற வண்டினங்கள் உள்ளிட்ட 275 வகைப் பறவைகள், எறும்புத் திண்ணிகள், மலைப்பாம்புகள், உடும்புகள் போன்ற விலங்கினங்கள் உள்ளது.[4][5] [6] [7]

பாரம்பரியச் சின்னங்கள்

தொகு

இச்சூழலியல் மண்டலத்தில் கிபி 7-8 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்கள் வடிவமைத்த அரிட்டாபட்டி மலைக்குன்றுகளில் குடைவரைக் கோயில், கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய சமணர் படுகைகள், குகைகள், மகாவீரர் புடைப்புச் சிற்பம் மற்றும தமிழ்ப் பிராமி கல்வெட்டு மற்றும் 1300 ஆண்டுகள் பழமையான தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகளும் உள்ளன.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு