இந்திய எறும்புண்ணி

எறும்பு திண்ணி இனம்
இந்திய எறும்புண்ணி
Scaly ant eater by by Dushy Ranetunge 2.jpg
இலங்கையில் ஒரு எறும்புண்ணி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Pholidota
குடும்பம்: Manidae
பேரினம்: Manis
இனம்: M. crassicaudata
இருசொற் பெயரீடு
Manis crassicaudata
E. Geoffroy, 1803
Manis crassicaudata range.png

இந்திய எறும்புண்ணி (Manis crassicaudata) என்பது ஒரு எறும்புண்ணி ஆகும். இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது.[2] இது பூனை அளவு கொண்டதாகவும், ஆனால் சற்றே நீளமான உடலும், நீண்ட வாலும், கூர்மையான முகம் கொண்ட, கூரிய நுண்ணறிவுள்ள விலங்கு ஆகும். மற்ற பாலூட்டிகள் போலல்லாமல் இதன் உடல் முழுக்க உள்ள செதில்கள் இதற்கு பாதுகாப்பு கவசமாகப் பயன்படுகிறது. உடலில் உள்ள முடிகளே காலப்போக்கில் செதில்களாக மாறிவிட்டன. பிற விலங்குகளிடமிருந்து தன்னை தற்பாதுகாக்க ஒரு இரும்பு குண்டு போல தன்னை சுருட்டிக்கொள்ள இதனால் முடியும். இதற்கு நல்ல உடல் வலு இருப்பதால் சுருட்டிக்கொண்ட உடலை இயல்பான நிலைக்கு விரிப்பது நம்மால் இயலாத செயல்.இதன் செதில்கள் நிறம் இதன் வாழும் சூழலில் பூமியின் நிறம் பொறுத்து மாறுபடுகிறது.[3] இது பகலில் நிலத்தடி வங்குகளிலும் பாறை இடுக்குகளிலும், மரபொந்துகளிலும் சுருண்டு உறங்கும். இருட்டியபின் இரை தேடக் கிளம்பும். எறும்பு, கரையான், ஈசல் போன்றவற்றை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர் வாழக்கூடியது. இதன் முன்னங்கால்களைவிட நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகளையும், செதில்களையும் தோண்டி எடுத்தும், மரங்களில் ஏறி மர எறும்புகளை பிடித்து உண்ணவல்லது. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. பசை கொண்ட நீண்ட, உருண்டையான நாக்கைப் புற்றின் உள்ளே விட்டு எறும்பு, கரையான் இவற்றைப் பிடிக்கும். அலங்கு ஒரே ஒரு குட்டியை ஈனும். அதன் குட்டி, கரடிக்குட்டி போலவே தாயின் முதுகில் சவாரி செய்யும்.[4] இதன் இறைச்சிக்காகவும், இதன் உடல் பாகங்கள் மருத்துவகுணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாகவும், இவை வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. [1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Manis crassicaudata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2014). பார்த்த நாள் 2014-07-29.
  2. வார்ப்புரு:MSW3 Pholidota
  3. ”Pangolins And Porcupines” by Jayantha Jayawardene, ”Daily News”, 21 August 2006. http://www.angelfire.com/planet/wildlifesl/articles/dn_pangolins_porcupines.htm (Retrieved on 4-6-2011).
  4. சு. தியடோர் பாஸ்கரன் (2018 சூலை 21). "கள்ளச்சந்தையில் காட்டுயிர்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எறும்புண்ணி&oldid=3055637" இருந்து மீள்விக்கப்பட்டது