கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (KOTTAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மேலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொட்டாம்பட்டியில் இயங்குகிறது.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக வளர்மதி என்பவரும், துணைப் பெருந்தலைவராக கௌசல்யா குலோத்துங்கன் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர் சமூகத்தினரே பெரும்பான்மையாக கிட்டத்தட்ட 85% க்கும் மேல் வசிக்கின்றனர்.
பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- 18. சுக்காம்பட்டி
- அட்டப்பட்டி
- அய்யாபட்டி
- எட்டிமங்கலம்
- கச்சிராயன்பட்டி
- கம்பூர்
- கருங்காலகுடி
- குன்னாரம்பட்டி
- கேசம்பட்டி
- கொடுக்கம்பட்டி
- கொட்டாம்பட்டி
- சூரப்பட்டி
- சென்னகரம்பட்டி
- சேக்கிபட்டி
- சொக்கம்பட்டி
- சொக்கலிங்கபுரம்
- தும்பைப்பட்டி
- தொந்திலிங்கபுரம்
- பட்டூர்
- பள்ளபட்டி
- பாண்டாங்குடி
- பூதமங்கலம்
- பொட்டப்பட்டி
- மணப்பச்சேரி
- மேலவளவு
- வஞ்சிநகரம்
- வலைச்சேரிபட்டி
வெளி இணைப்புகள்
தொகு- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 27 கிராம ஊராட்சிகள்