அலங்காநல்லூர்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


அலங்காநல்லூர் (ஆங்கில மொழி: Alanganallur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[1] இவ்வூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குப் பெயர் பெற்றது.

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர்
அமைவிடம்: அலங்காநல்லூர், தமிழ்நாடு
ஆள்கூறு 10°02′51″N 78°05′25″E / 10.0474°N 78.0904°E / 10.0474; 78.0904
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் வாடிப்பட்டி
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி அலங்காநல்லூர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,331 (2011)

2,569/km2 (6,654/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi)

204.85 மீட்டர்கள் (672.1 அடி)

இணையதளம் www.townpanchayat.in/alanganallur

புவியியல்

தொகு

இவ்வூர் 10°02′51″N 78°05′25″E / 10.0474°N 78.0904°E / 10.0474; 78.0904[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 204.85 மீட்டர் (672.1 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அலங்காநல்லூர் (Madurai)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 ஆண்கள், 6,045 பெண்கள் ஆவார்கள். அலங்காநல்லூரில் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் உள்ளனர். அலங்காநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.27%, பெண்களின் கல்வியறிவு 70.93% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. அலங்காநல்லூர் மக்கள் தொகையில் 1,269 (10.29%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.75% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.19%, இஸ்லாமியர்கள் 0.81%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அலங்காநல்லூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 16.42%, பழங்குடியினர் 0.13% ஆக உள்ளனர். அலங்காநல்லூரில் 3,171 வீடுகள் உள்ளன.[2]

ஜல்லிக்கட்டு

தொகு
மேலதிக விவரங்களுக்கு பார்க்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு இந்த ஊரின் மற்றொரு முக்கிய அடையாளமாகும்.

 
2011 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.
 

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "அலங்காநல்லூர் பேரூராட்சி". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  2. Alanganallur Population Census 2011 பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காநல்லூர்&oldid=4135442" இலிருந்து மீள்விக்கப்பட்டது