வாடிப்பட்டி வட்டம்
வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1]மதுரை வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஏழு உள்வட்டங்களும், 77 வருவாய் கிராமங்களும் உள்ளன.
வாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை உள்வட்டம், சோழவந்தான் உள்வட்டம், தனிச்சியம் உள்வட்டம், அலங்காநல்லூர் உள்வட்டம், பாலமேடு உள்வட்டம், முடுவார்பட்டி உள்வட்டம் மற்றும் நீரேத்தான் உள்வட்டம் என ஏழு உள்வட்டங்களைக் கொண்டுள்ளது. [2]
இவ்வட்டத்தில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
தென்கரை உள்வட்டம்
தொகுதென்கரை உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- அயன் தென்கரை
- கோவில் தென்கரை
- முள்ளிப்பள்ளம்
- கருப்பட்டி
- நாச்சிகுளம்
- இரும்பாடி
- அயன் குருவித்துறை
- கோவில் குருவித்துறை
- மேலக்கால்
- கச்சிராயிருப்பு
- மன்னாடிமங்கலம்
சோழவந்தான் உள்வட்டம்
தொகுசோழவந்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- சோழவந்தான்
- திருமால்நத்தம்
- நெடுங்குளம்
- திருவேடகம்
- சித்தலாங்குடி
- திருவாலவாயநல்லூர்
- நகரி
- தட்டான்குளம்
- சோலைக்குறிச்சி
- பேட்டை
தனிச்சியம் உள்வட்டம்
தொகுதனிச்சியம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- தனிச்சியம்
- சின்ன இலந்தைக்குளம்
- அமரடக்கி
- கொண்டையம்பட்டி
- சம்பக்குளம்
- கள்வேலிப்பட்டி
- பெரிய இலந்தைக்குளம்
- மேய்க்கிபட்டி
- கீழக்கரை
அலங்காநல்லூர் உள்வட்டம்
தொகுஅலங்காநல்லூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- அலங்காநல்லூர்
- அழகாபுரி
- தண்டலை
- மணியஞ்சி
- குமாரம்
- அச்சம்பட்டி
- இலவங்குளம்
- பண்ணைக்குடி
- கல்லணை
- வாவிடமருதூர்
- பரளி
பாலமேடு உள்வட்டம்
தொகுபாலமேடு உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- பாலமேடு
- சத்திரவெள்ளாளப்ப்பட்டி
- மேட்டுப்பட்டி
- இராஜாக்காள்பட்டி
- கிருஷ்ணாபுரம்
- கோணப்பட்டி
- இராமக்கவுண்டன்பட்டி
- செம்பட்டி
- சேந்தமங்கலம்
- தெத்தூர்
முடுவார்பட்டி உள்வட்டம்
தொகுமுடுவார்பட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- முடுவார்பட்டி
- ஆதனூர்
- கீழச்சின்னம்பட்டி
- சுக்காம்பட்டி
- கோடாங்கிபட்டி
- பாரைப்பட்டி
- சரந்தாங்கி
- வெள்ளையம்பட்டி
- மாணிக்கம்பட்டி
- தேவசேரி
- அய்யூர்
- ஊர்சேரி
- கோவில்பட்டி
- வைகாசிபட்டி
- எர்ரம்பட்டி
நீரேத்தான் உள்வட்டம்
தொகுநீரேத்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
- நீரேத்தான்
- டி. ஆண்டிப்ப்பட்டி
- தும்பிச்சாம்பட்டி
- சின்னமநாயக்கன்பட்டி
- கட்டக்குளம்
- தாதம்பட்டி
- ஜாரி விராலிப்பட்டி
- குலசேகரன் கோட்டை
- கச்சைக்கட்டி
- போடிநாயக்கன்பட்டி
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 60,844 வீடுகளும், 234,533 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 117,723 ஆண்கள் ஆகவும்; 116,810 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.48% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 53,254 மற்றும் 2,525 ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madurai District Revenue Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ வாடிப்பட்டி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ Vadipatti Taluka Population, Religion, Caste, Working Data Census 2011