மதுரை கிழக்கு வட்டம்

மதுரை கிழக்கு வட்டம், மதுரை வடக்கு வட்டத்தின் 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம், யா. ஒத்தக்கடையில் இயங்குகிறது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. [2][3]

22,111 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது. இவ்வட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

தொகு

மதுரை கிழக்கு வருவாய் வட்டம், வருவாய் ஆய்வாளர்களின் கீழ் 7 உள்வட்டங்கள் (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, அரும்பனூர், யா. ஒத்தக்கடை, இராஜாக்கூர், குன்னத்தூர் மற்றும் சக்கிமங்கலம் ஆகும். இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 106 வருவாய் கிராமங்கள் உள்ளது.[4]

கல்வி நிலையங்கள்

தொகு

மதுரை கிழக்கு வட்டத்தில் ஆறு கல்லூரிகளும்; 14 உயர்நிலைப் பள்ளிகளும்; 8 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்குகிறது.

கல் குவாரிகள்

தொகு

இவ்வட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம், இடையப்பட்டி, குன்னத்தூர், கருப்புக்கல், வண்டியூர் மற்றும் கலிகாப்பான் கிராமங்களில் கருங்கற்கள் வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. "மதுரை கிழக்கு வட்டம்". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
  4. மதுரை கிழக்கு வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_கிழக்கு_வட்டம்&oldid=3566455" இலிருந்து மீள்விக்கப்பட்டது