வருவாய் ஆய்வாளர்
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்யும் அதிகாரியாக வருவாய் ஆய்வாளர் இருக்கிறார்.
வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்
தொகுதமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை, வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.[1]
- பயிராய்வு
- கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
- நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
- கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
- “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.
- புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
- ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.
- இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.
- முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.
- பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
- பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
- மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
- ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
- வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
- வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
- பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.
- நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.
- குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
- நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.
- பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.
- வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
- முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.
- தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு கோப்புகளை தணிக்கை செய்தல்.
- கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.
- புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்
பிற பணிகள்
தொகு- பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்
- நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.
- கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.
- வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.
- சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.
- தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.
- மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
- கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.
- கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
- பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
- வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம் பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்