மதுரை தெற்கு வட்டம்
மதுரை (தெற்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகம் மதுரையில் உள்ளது. மேலூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் கீழ் மூன்று உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2][3]இதன் வட்டாட்சியர் அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ளது.
மதுரை தெற்கு வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
தொகுஅவனியாபுரம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- அனுப்பானடி
- கல்லம்பல்
- அவனியாபுரம்
- பனையூர்
- சிந்தாமணி
- சாமநத்தம்
- செட்டிக்குளம்
- பெருமானேந்தல்
- கல்குளம்
- அயன்பாப்பாகுடி
- பாப்பனோடை
கீழ்மதுரை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- வில்லாபுரம்
- பிராகுடி
- ஐராவதநல்லூர்
- விரகனூர்
- புளியங்குளம்
- சிலைமான்
- கீழ்மதுரை
- மீனாட்சிபுரம்
- கூடல்செங்குளம்
விராதனூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- குசவன்குண்டு
- குதிரைகுத்தி
- இராமன்குளம்
- நல்லூர்
- சோளங்குருணி
- குசவப்பட்டி
- விராதனூர்
- மூத்தான்குளம்
- எம். பனைக்குளம்
- எம். ஆலங்குளம்
- நெடுங்குளம்
மக்கள்தொகை பரம்பல்
தொகுமதுரை தெற்கு வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 13,91,980 ஆகும். அதில் ஆண்கள் 6,97,680; பெண்கள் 694,300 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 951 ஆகவுள்ளது. மாவட்ட சராசரி எழுத்தறிவு 89.14% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 141,119 ஆகவுள்ளனர். [4]
இவ்வட்டத்தின் மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,05,641 (7.6%) மற்றும் 5,307 (0.4%) ஆகவுள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் 12,20,131 (87.65%), இசுலாமியர் 1,02,206 (7.34%), கிறித்தவர்கள் 64,252 (4.62%) ஆகவும் உள்ளனர்.