ஐராவதநல்லூர்
ஐராவதநல்லூர், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டத்தில் உள்ள கீழ்மதுரை உள்வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2] தற்போது ஐராவதநல்லூர், மதுரை மாநகராட்சியின் மண்டல எண் 3, வார்டு எண் 55-இல் அமைந்துள்ளது. [3] கிழக்கு எல்லையில் உள்ளது.
ஐராவதநல்லூர், மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
அமைவிடம்
தொகுஐராவதநல்லூர், மதுரை மாநகராட்சி மணடல எண் 3-இல் வார்டு எண் 55-இல் உள்ளது. ஐராவதநல்லூர், மதுரை - இராமேஸ்வரம் நெடுன்சாலையின் மீது உள்ளது. இது மதுரை இரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625009 ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,869 குடும்பங்களையும் கொண்ட ஐராவதநல்லூரின் மக்கள்தொகை 7,423 ஆகும். எழுத்தறிவு 87.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 799 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 983 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,157 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.51%, இசுலாமியர்கள் 1.08%, கிறித்தவர்கள், 10.1%, மற்றும் பிறர் 1.30% ஆகவுள்ளனர். [4]
அருகமைந்த ஊர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Madurai District Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ Madurai South Taluk and its Firkas and Revenue Villages
- ↑ "மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்". Archived from the original on 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
- ↑ ஐராவதநல்லூர் மக்கள்தொகை பரம்பல்