திருப்பரங்குன்றம் தர்கா

திருப்பரங்குன்றம் தர்கா, திருப்பரங்குன்றம் மலையின் மீது அமைந்துள்ள இசுலாமியத் துறவியான அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசா அவர்களின் கல்லறையாகும்.

மலை மீது அமைந்துள்ள தர்கா.

வரலாறுதொகு

 
திருப்பரங்குன்றம் தர்காவில் உள்ள அசரத்தின் பெயர் மற்றும் மறைந்த ஆண்டைக் குறிக்கும் கல்வெட்டு.

12 ஆம் நூற்றாண்டில் ஜித்தா நகரின் ஆளுநரான சிக்கந்தர் பாதுசா, அசரத்து சையது இபுறாகீம் பாதுசாவுடன் தமிழ்நாட்டின் ஏர்வாடி நகருக்கு வந்தனர்.[1] அவர்கள் இருவரும் திருப்பாண்டியனுடன் போரிட்டு மதுரை மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றினாலும், பின் திருப்பாண்டியனின் மறு தாக்குதலில் திருப்பரங்குன்றம் மலை மீது மரணமடைந்தார். அவர் மரணத்திற்கு பின், பாண்டிய மன்னருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், அசரத்து அவர்களின் அடக்கத்தலத்தில் மன்னிப்பு பெற்று மீண்டும் கண்பார்வை பெற்றதாகவும் நம்பப்படுகிறது. மதுரை மக்பராவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூன்றாவது மதுரை அசரத்தான சையது அப்துல் சலாம் அவர்கள், அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவினைக் குறித்து புகழ் பாக்கள் இயற்றியுள்ளார்.[2]

கந்தூரி விழாதொகு

ஒவ்வொரு ஹிஜிரி ஆண்டும் ரஜப்பு மாதம் 17 ஆம் இரவில் கந்தூரி (உரூசு) விழா நடைபெறுகிறது. இந்நாளில் அதிக அளவில் மக்கள் மலை மேல் இருக்கும் தர்காவிற்கு வருகை தருகின்றனர்.

தர்காவிலிருந்து நகரின் பார்வைதொகு

திருப்பரங்குன்றம் தர்காவிலிருந்து நகரின் பார்வை, சூன் 2011.

மேலும் பார்க்கதொகு

உசாத்துணைகள்தொகு

3. http://thiruparankundram.com/