ஏர்வாடி (திருநெல்வேலி மாவட்டம்)

(ஏர்வாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏர்வாடி (ஆங்கிலம்:Eruvadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஏர்வாடி
ஏர்வாடி
இருப்பிடம்: ஏர்வாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°26′45″N 77°36′17″E / 8.44583°N 77.60472°E / 8.44583; 77.60472
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,067 (2011)

2,151/km2 (5,571/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.4 சதுர கிலோமீட்டர்கள் (3.2 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/eruvadi

அமைவிடம்

தொகு

மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 38 கிமீ தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; திருக்குறுங்குடியிலிருந்து 6 கிமீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் ஏர்வாடி பேரூராட்சி உள்ளது.


வரலாறு

தொகு

பண்டைய கால ஏர்வாடி மக்கள் விவசாயம், வணிகம் மற்றும் நிதி மேம்பாடுகளில் சிறந்து விளங்கினர். பழக்கால ஏர்வாடி மக்கள் பாண்டிய மன்னன் குலசேகரின் இராணுவத்தில் இணைந்து சேர மன்னனுக்கு எதிராக பணகுடியில் நடந்த போரில் பங்கேற்றனர். ஏர்வாடி புளியஞ்சுவனம் என்றும் அழைக்கப்படுகிறது. புளியஞ்சுவனம் என்ற பெயரில் ஒரு கல்வெட்டும் ஏர்வாடி கைகாட்டிக்கு அருகில் உள்ளது.[3]

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

8.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4239 வீடுகளும், 18067 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

பெயர்க் காரணம்

தொகு

மக்கள் ஏர் உழும்போது பாடிக்கொண்டு உழுததால் ஏர்பாடி என்பது ஏர்வாடியாக மருவியது என்பர். ஏர்வாடி என்னும் இந்த சொல் "ஏர்" "கலப்பை" என்னும் என்னும் சொல்லில் இருந்தது வந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்திலும் ஏர்வாடி என்றொரு கிராமம் உள்ளது

ஏர்வாடி சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஊர். 12 ஆம் நூற்றாண்டில் சூஃபி இஸ்லாமிய மன்னர் சுல்தான் செய்யது இப்ராஹிம் என்பவரால் ஏர்வாடி என்ற பெயர் வைக்கப்பட்டது என்பது ஏர்வாடி மக்களின் பாரம்பரியம்[7]

புவியியல்

தொகு

இவ்வூரின் நடுவே நம்பி ஆறு பாய்கிறது. தற்பொழுது உள்ள தட்ப வெட்ப காரணங்களினால் ஆற்றில் நீர் வற்றி காணபடுகிறது. நம்பியாற்றை வைத்து ஏர்வாடி வடக்கு, ஏர்வாடி தெற்கு என்று பிரிக்கப்படுகிறது. இவ்வூரின் ஒவ்வொரு தெருக்களும் நம்பியாற்றுடன் முடிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி நகரை சுற்றி பல சிறு கிராமங்கள் உள்ளது. ஏர்வாடியின் சுற்றுப்பகுதி பல மலைகளும், குளங்களும், விவசாய நிலங்களும், வாழைத் தோட்டங்களும், தென்னத்தோட்டங்களும் அமைக்கப்பெற்றுள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் இருந்து ஏறத்தாழ 38 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூரில் ரயில் நிலையம் ஏர்வாடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாக இருகின்றது. சாலை வழியாக ஏர்வாடி சென்னையுடனும் (670 கிலோ மீட்டர்), மதுரையுடனும்(205 கிலோ மீட்டர்) இன்னும் இன்ன பிற நகரங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வூரின் அருகாமையில் உள்ள விமான நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவில் திருவனந்தபுறத்தில் இருகின்றது.

கல்வி

தொகு

ஏர்வாடி பேரூராட்சியில் பல்வேறு பள்ளிகளின் விவரம்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள்:

  • இராணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • அல்-ஹுதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நெம்ஸ் பள்ளி, மீனாட்சிபுரம்

அரசு பள்ளிகள்:

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • அரசு நடுநிலைப் பள்ளி
  • அரசு தொடக்கப் பள்ளிகள் 2

CBSE பள்ளிகள்

  • நிம்ஸ் ஸ்டார்ட்டர்ஸ்

விளையாட்டு

தொகு

இங்கு பலதரப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானவை கிரிக்கெட் மற்றும் கைபந்து. கைபந்து விளையாட்டை இவர்களது ஊர் விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இது போக கிராமத்து விளையாட்டுகளான கில்லி, கோலி, பம்பரம், கபடி ஆகியவை இந்த ஊர் சிறுவர்களிடையே பிரசித்தம். கில்லி விளையாட்டினை இவ்வூரில் குச்சி-கம்பு என்று அழைப்பார்கள்.

வழிபாட்டு தலங்கள்

தொகு

ஏர்வாடி முஸ்லிம், இந்து, கிறித்தவ மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு தலங்கள் உள்ளன.

மசூதிகள்

தொகு

ஏர்வாடியில் உள்ள மசூதிகளில்

  • மேலமுஹல்லம் ஜும்மா பள்ளிவாசல்
  • நடுமுஹல்லம் பீர் சாஹிப் பள்ளிவாசல்
  • கீழமுஹல்லம் பள்ளிவாசல்
  • பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசல்
  • முஹைதீன் பள்ளிவாசல் மற்றும்
  • லெப்பைவளவு முகாம் பள்ளிவாசல்
  • மெயின் ரோடு பள்ளிவாசல் பிரசித்தி பெற்றவை.
  • தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்

இது போக சிறிய பள்ளிவாசல்களும், தர்காகளும் இருக்கின்றன. வருடம் ஒரு முறை கந்தூரிகளும் சந்தன கூடு திருவிழாவும் நடைபெறுவது உண்டு.

கோவில்கள்

தொகு

பெருமாள் கோவில் திருகுரங்குடி - ஏர்வாடி பாதையில் அமைந்து இருக்கின்றது. இது போக ஹரிஹர சாஸ்த கோவிலும் பெரியநாயகி அம்மன் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. சந்தன மாரி முப்பிடாதி உச்சினிமாளி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த தெய்வங்கள் உள்ளன

தேவாலயங்கள்

தொகு

ஏர்வாடியில் புனித ஜோசப் தேவாலயம் பிரசித்தம்.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Wayback Machine". web.archive.org. 2014-04-21. Archived from the original on 2014-04-21. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Eruvadi Population Census 2011
  7. "History of Nellai Eruvadi". www.nellaieruvadi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.