திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்:Thiruparankundram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் முன்பு பேரூராட்சியாக இருந்தது. பின்னர் மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலின் போது மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தின் 96-வது வார்டில் இணைக்கப்பட்டது.[4] மதுரை நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகும்.
திருப்பரங்குன்றம் | |||
— மதுரை மாநகராட்சிப் பகுதி — | |||
ஆள்கூறு | 9°52′56″N 78°04′19″E / 9.882300°N 78.072000°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | மதுரை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | திருப்பரங்குன்றம் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 39,009 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 171 மீட்டர்கள் (561 அடி) | ||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்தப் பகுதியில் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,009 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பரங்குன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. திருப்பரங்குன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
போக்குவரத்து
தொகுஇருப்புப்பாதை
தொகுதமிழ்நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இருப்புப் பாதை மூலம் இணைக்கும் திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது.
ஆன்மீகத் தலங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "[[மதுரை]] மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்". Archived from the original on 2019-08-07. Retrieved 2019-08-19.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)