வி. வி. ராஜன் செல்லப்பா

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர மேனாள் தந்தையும் ஆவார்

வி. வி. ராஜன் செல்லப்பா ஓர் இந்திய அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் மேயரும் ஆவார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், 1992 இலிருந்து 1998 வரை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[2]

வி. வி. ராஜன் செல்லப்பா
மேயர், மதுரை மாநகராட்சி
பதவியில்
அக்டோபர் 25, 2011 – அக்டோபர் 24, 2026
முன்னையவர்தேன்மொழி கோபிநாதன்
பின்னவர்இந்திராணி பொன்வசந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 16, 1949 (1949-08-16) (அகவை 75)
மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்மகேசுவரி செல்லப்பா
பிள்ளைகள்வி. வி. ராஜ் சத்யன்
வாழிடம்(s)பசுமலை, மதுரை – 625 004.

அக்டோபர் 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பாக்கியநாதனைத் தோற்கடித்து மதுரை மேயரானார்.

2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

உசாத்துணைகள்

தொகு
  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Commission. Archived from the original on 31 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
  2. "List of Rajya Sabha Member from Tamil Nadu".
  3. [1]
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._ராஜன்_செல்லப்பா&oldid=4050263" இலிருந்து மீள்விக்கப்பட்டது