மதுரை மருத்துவக் கல்லூரி

மதுரை மருத்துவக் கல்லூரி மதுரையில் 1954 ல் தமிழக அரசால் அரசு இராசாசி மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை இருபது மில்லியன் மக்கள்தொகையுள்ள தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு மூன்றாம் நிலை சிகிச்சை வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த மருத்துவக்கல்லூரி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஏற்பு பெற்றுள்ளது. இக்கல்லூரி ஆகஸ்ட் 2, 1954 இல் அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் மைய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ராசகுமாரி அம்ரத் கவுர் அவர்களால் துவங்கப்பட்டது. கே.பி. சாரதி முதல் சிறப்பு அதிகாரியாகவும் மற்றும் சாரா ஜே சவுரி முதல் முதல்வராகவும் இருந்தனர். நிரந்தர அங்கிகாரம் 1954 லும், இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கிகாரம் 1961 லும் பெற்றது. தற்போதைய கட்டிடம் 1958 இல் கட்டப்பட்டது. இக்கல்லூரி 1979 இல் வெள்ளி விழாவும், 2004 பொன் விழாவும் கண்டது. இது முதலில் சென்னைப் பல்கலைக் கழகத்துடனும், பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதிலிருந்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

மதுரை மருத்துவக் கல்லூரி
9°55′40″N 78°08′13″E / 9.927849°N 78.136822°E / 9.927849; 78.136822
நிறுவப்பட்டது1954
வகைஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
துறை முதல்வர்மரு.ஜெ.சங்குமணி MD, D.Diab
ஆசிரியர்கள்200 (ஏறத்தாழ.)
பணியாளர்கள்600 (ஏறத்தாழ.)
பட்டப்படிப்பு150 ஓராண்டுக்கு (MBBS)
பட்ட மேற்படிப்பு100 மொத்தம் (ஏறத்தாழ.)
அமைவுமதுரை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்ஊரகம்
விளையாட்டு விளிப்பெயர்MDUMC

கற்பிக்கப்படும் பாடங்கள்

தொகு

மதுரை மருதுவக்கல்லூரியில் பட்டப் படிப்பு தவிர பட்ட மேற்படிப்பு, சிறப்பு மேற்படிப்புகள், பட்டயப்படிப்புகள்

பட்டப் படிப்பு

தொகு

எம்.பி.பி.எஸ்.,

பட்ட மேற்படிப்பு

தொகு
  1. எம்.டி., பொது மருத்துவம்
  2. எம்.டி., மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவம்
  3. எம்.டி., உடலியங்கியல்
  4. எம்.டி., நோய்குறியியல்
  5. எம்.டி., குழந்தைகள் மருத்துவம்
  6. எம்.டி., நுண்ணுயிரியல்
  7. எம்.டி., மருந்தாக்கியல்
  8. எம்.டி., தடய அறிவியல்
  9. எம்.டி., மனநல மருத்துவம்
  10. எம்.டி., மயக்கவியல்
  11. எம்.எஸ்., பொது அறுவையியல்
  12. எம்.எஸ்., உடற் கூற்றியல்
  13. எம்.எஸ்., கண் அறுவையியல்
  14. எம்.எஸ்., காது,மூக்கு,தொண்டை அறுவையியல்
  15. எம்.எஸ்., எலும்பு முறிவு அறுவையியல்

உயர் சிறப்புக் கல்விகள்

தொகு
  • டி.எம்., - நரம்பியல் மருத்துவம்
  • டி.எம்., - இதய மருத்துவம்
  • எம்.சி.எச்., - நரம்பு அறுவையியல்
  • எம்.சி.எச்., - நரம்பு அறுவையியல் (ஐந்தாண்டு)
  • எம்.சி.எச். - ஒட்டுறுப்பியல்
  • எம்.சி.எச்., - இதய அறுவையியல்
  • எம்.சி.எச்., - குழந்தைநல அறுவையியல்

பட்டயப்படிப்பு

தொகு
  • டி.ஜி.ஓ.,
  • டி.சிஎச்.,
  • டி.எல்.ஓ.,
  • டி.ஏ.,
  • டி.ஆர்த்தோ.,
  • டி.எம்.ஆர்.டி.,
  • டி.ஓ.,
  • டி.ப்பி.எம்.,

இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள்

தொகு
  • அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.
  • அரசு பொது மருத்துவமனை, பாலரெங்காபுரம், மதுரை.
  • அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, தோப்பூர் மதுரை.
  • அரசு தொற்றுநோய் மருத்துவமனை, தோப்பூர், மதுரை
  • அரசு காலரா சேமிப்பு மையம், தோப்பூர், மதுரை.

மேற்கோள்கள்

தொகு