தமிழ்நாடு அரசு

(தமிழக அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு அரசு[1]1986 வரை தமிழ்நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு
TamilNadu Logo.svg
தலைமையிடம்புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
செயற்குழு
ஆளுநர்ஆர். என். ரவி
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
தலைமைச் செயலாளர்வெ. இறையன்பு, இ. ஆ. ப.
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்எம். அப்பாவு, (திமுக)
துணை சபாநாயகர்கு. பிச்சாண்டி, (திமுக)
உறுப்பினர்கள்234
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிநீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதைய ஆட்சியாளர்தொகு

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் ஆர். என். ரவி[2], தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின்[3], தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ. ஆ. ப., தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி [4] ஆகியோர் ஆவர்.

தொகுதிகள்தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 72,138,959 ஆகும். இது 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளும், 39 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. தமிழக அரசு 38 மாவட்டங்களையும், 87 வருவாய் கோட்டங்களையும், 310 வட்டங்களையும், 21 மாநகராட்சிகளையும், 121 நகராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும், 528 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமைதொகு

தமிழ்நாடு மாநிலம், மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியதன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில், தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

அமைச்சர்கள்தொகு

தமிழகத்தில் மொத்தம் முதலமைச்சருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் உள்ளனர்.

வ. எண். பெயர் தொகுதி பொறுப்பு துறைகள் கட்சி
முதலமைச்சர்
1. மு. க. ஸ்டாலின் கொளத்தூர் முதலமைச்சர்
 • பொது
 • பொது நிர்வாகம்
 • இந்திய ஆட்சிப்பணி
 • இந்திய காவல் பணி
 • அகில இந்திய பணி
 • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
 • காவல்
 • உள்துறை
 • சிறப்பு முயற்சி
 • சிறப்புத் திட்ட செயலாக்கம்
 • மாற்றுத் திறனாளிகள் நலன்
திமுக
அமைச்சர்கள்
2. துரைமுருகன் காட்பாடி நீர்வளத் துறை அமைச்சர்
 • சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம்
 • மாநில சட்டமன்றம்
 • ஆளுநர் மற்றும் அமைச்சரவை
 • தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
 • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
திமுக
3. பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்தி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
 • நிதித்துறை
 • திட்டம்
 • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்
 • அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்
திமுக
4. கே. என். நேரு திருச்சி மேற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
 • நகராட்சி நிர்வாகம்
 • நகர்ப்பகுதி
 • குடிநீர் வழங்கல்
திமுக
5. இ. பெரியசாமி ஆத்தூர் (திண்டுக்கல்) கூட்டுறவுத் துறை அமைச்சர்
 • கூட்டுறவு
 • புள்ளியியல்
 • முன்னாள் ராணுவத்தினர் நலன்
திமுக
6. க. பொன்முடி திருக்கோயிலூர் உயர்கல்வித் துறை அமைச்சர்
 • உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி
 • மின்னணுவியல்
 • அறிவியல்
 • தொழில்நுட்பவியல்
திமுக
7. எ. வ. வேலு திருவண்ணாமலை பொதுப்பணித் துறை அமைச்சர்
 • பொதுப்பணிகள்
 • கட்டிடங்கள்
 • நெடுஞ்சாலைகள்
 • சிறு துறைமுகங்கள்
திமுக
8. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
 • வேளாண்மை
 • வேளாண்மை பொறியியல்
 • வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
 • தோட்டக்கலை
 • கரும்புத்தீர்வை
 • கரும்புப் பயிர் மேம்பாடு
 • தரிசு நில மேம்பாடு
திமுக
9. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
 • வருவாய்
 • மாவட்ட வருவாய் நிர்வாகம்
 • துணை ஆட்சியர்கள்
 • பேரிடர் மேலாண்மை
திமுக
10. தங்கம் தென்னரசு திருச்சுழி தொழில்துறை அமைச்சர்
 • தொழில்துறை
 • தமிழ் ஆட்சி மொழி
 • தமிழ் பண்பாட்டுத்துறை
 • தொல்பொருள்
திமுக
11. எஸ். ரகுபதி திருமயம் சட்டத் துறை அமைச்சர்
 • சட்டம்
 • நீதிமன்றங்கள்
 • சிறைச்சாலை
 • ஊழல் தடுப்புச் சட்டம்
திமுக
12. சு. முத்துசாமி ஈரோடு மேற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர்
 • வீட்டு வசதி
 • ஊரக வீட்டு வசதி
 • நகரமைப்புத் திட்டமிடல்
 • வீட்டு வசதி மேம்பாடு
 • இடவசதி கட்டுப்பாடு
 • நகரத் திட்டமிடல்
 • நகர் பகுதி வளர்ச்சி
 • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
திமுக
13. கே. ஆர். பெரியகருப்பன் திருப்பத்தூர் (சிவகங்கை) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
 • ஊரக வளர்ச்சி
 • ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
 • வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
 • ஊரக கடன்கள்
திமுக
14. தா. மோ. அன்பரசன் ஆலந்தூர் ஊரகத் தொழில்துறை அமைச்சர்
 • ஊரகத் தொழில்கள்
 • குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள்
 • குடிசை மாற்று வாரியம்
திமுக
15. எம். பி. சாமிநாதன் காங்கேயம் செய்தித் துறை அமைச்சர்
 • செய்தி மற்றும் விளம்பரம்
 • திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
 • பத்திரிகை
 • அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
 • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
 • அரசு அச்சகம்
திமுக
16. பெ. கீதா ஜீவன் தூத்துக்குடி சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
 • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
 • ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
 • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
 • இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
திமுக
17. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
 • மீன்வளம்
 • மீன் வளர்ச்சிக் கழகம்
 • கால்நடை பராமரிப்பு
திமுக
18. ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் போக்குவரத்துத் துறை அமைச்சர்
 • போக்குவரத்து
 • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து
 • இயக்கூர்தி சட்டம்
திமுக
19. கே. இராமச்சந்திரன் குன்னூர் வனத்துறை அமைச்சர்
 • வனம்
திமுக
20. அர. சக்கரபாணி ஒட்டன்சத்திரம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
 • உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்
 • நுகர்வோர் பாதுகாப்பு
 • விலைக்கட்டுப்பாடு
திமுக
21. வே. செந்தில்பாலாஜி கரூர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
 • மின்சாரம்
 • மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
 • மதுவிலக்கு ஆயத்தீர்வை
 • கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
திமுக
22. ஆர். காந்தி ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
 • கைத்தறி மற்றும் துணிநூல்
 • கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்
 • பூதானம் மற்றும் கிராம தானம்
திமுக
23. மா. சுப்பிரமணியம் சைதாப்பேட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
 • மக்கள் நல்வாழ்வு
 • மருத்துவக் கல்வி
 • குடும்ப நலன்
திமுக
24. பி. மூர்த்தி மதுரை கிழக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
 • வணிகவரி
 • பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம்
 • எடைகள் மற்றும் அளவைப்கள்
 • கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
 • சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
திமுக
25. எஸ். எஸ். சிவசங்கர் குன்னம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
 • பிற்படுத்தப்பட்டோர் நலன்
 • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
 • சீர் மரபினர் நலன்
திமுக
26. பி. கே. சேகர் பாபு துறைமுகம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
 • இந்து சமயம்
 • அறநிலையங்கள்
திமுக
27. சா. மு. நாசர் ஆவடி பால்வளத் துறை அமைச்சர்
 • பால்வளம்
 • பால் பண்ணை வளர்ச்சி
திமுக
28. செஞ்சி கே. எஸ். மஸ்தான் செஞ்சி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
 • சிறுபான்மையினர் நலன்
 • வெளிநாடு வாழ் தமிழர் நலன்
 • அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள்
 • வக்பு வாரியம்
திமுக
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
 • பள்ளிக்கல்வி
திமுக
30. சிவ. வீ. மெய்யநாதன் ஆலங்குடி சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
 • சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
 • இளைஞர் நலன்
 • விளையாட்டு மேம்பாட்டுத் துறை
திமுக
31. சி. வே. கணேசன் திட்டக்குடி தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
 • தொழிலாளர் நலன்
 • மக்கள் தொகை
 • வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
 • மக்கள் தொகை கணக்கெடுப்பு
 • நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
திமுக
32. மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
 • தகவல் தொழில்நுட்பத் துறை
திமுக
33. மா. மதிவேந்தன் இராசிபுரம் சுற்றுலாத்துறை அமைச்சர்
 • சுற்றுலா
 • சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
திமுக
34. என். கயல்விழி செல்வராஜ் தாராபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
 • ஆதிதிராவிடர் நலன்
 • மலைவாழ் பழங்குடியினர்கள்
 • கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
திமுக

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "தமிழ்நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்". 2010-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-13 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. http://www.tn.gov.in/government/keycontact/198

அதிகாரப்பூர்வ இணைய தளம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அரசு&oldid=3626569" இருந்து மீள்விக்கப்பட்டது