சு. முத்துசாமி

தமிழக அரசியல்வாதி

சு. முத்துசாமி (S. Muthusamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும், அமைச்சர் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு தொகுதியில் இருந்து 1977, 1980, 1984 தேர்தல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] மேலும் பவானி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் எம். ஜி. இராமச்சந்திரனின் அமைச்சரவையில் எட்டு ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராகவும், 1991 தேர்தலுக்குப்பின் ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

சு. முத்துசாமி
படிமம்:S Muthusamy.jpg
வீட்டு வசதித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2021
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
1980–1987
முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன்
சுகாராரத்துறை அமைச்சர்
பதவியில்
1991–1996
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
தனிநபர் தகவல்
பிறப்பு நெடுங்குளம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்


முத்துசாமி 2010 இல் திமுகவில் சேர்ந்தார், அவர் 2021 ஆம் ஆண்டில் ஈரோடு மேற்கு தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.[5]

பணிகள்தொகு

ஈரோட்டில் செயல்பட்ட அரசியல்வாதிகளில் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் முதன்மையானவர் முத்துசாமி ஆவார். மேலும் ஈரோட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல செயல்படுத்தியும், கொங்கு நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு போக்குவரத்து துறையை வளர்த்தவரும் ஆவார். முத்துசாமி பல புதிய திட்டங்களை கொங்கு நாட்டுக்கு கொண்டுவந்தவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு பேருந்து நிலையம், IRTT தொழில்நுட்பக் கல்லூரி (IRTT), ஈரோடு, ஐ. ஆர். டி.டி மருத்துவ கல்லூரி, பவானி-ஈரோடு சாலையில் புதிய பாலம் போன்றவை இவரால் பெற்றவையாகும். முத்துசாமி 2010 ல் திமுகவில் இணைந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த இவர்[6] தற்போது, திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.[7]

தேர்தல்கள் போட்டியிட்ட மற்றும் முடிவுகள்தொகு

தேர்தல்கள் தொகுதி முடிவு
1977 ஈரோடு தொகுதி வெற்றி
1980 ஈரோடு தொகுதி வெற்றி
1984 ஈரோடு தொகுதி வெற்றி
1991 பவானி தொகுதி வெற்றி
2011 ஈரோடு கிழக்கு தொகுதி தோல்வி
2016 ஈரோடு கிழக்கு தொகுதி தோல்வி
2021 ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._முத்துசாமி&oldid=3266642" இருந்து மீள்விக்கப்பட்டது