தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை
(தமிழ்நாடு சட்டமன்ற வளாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்பது தமிழக அரசுக்கு சொந்தமான பன்னோக்கு மருத்துவமனை ஆகும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பிப்ரவரி 2014 நாளன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை
அமைவிடம் ஓமந்தூரார் அரசு வளாகம், அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மருத்துவப்பணி பொது
வகை முழுநேர மருத்துவ சேவை மையம்
படுக்கைகள் 400
பட்டியல்கள்
Map
பொதுவான தகவல்கள்
கட்டுமான ஆரம்பம்2008; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
நிறைவுற்றது2010; 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2010)
துவக்கம்மார்ச்சு 13, 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-03-13) (சட்டமன்றக் கட்டிடமாக)
மே 15, 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-05-15) (as hospital)
செலவு1,100 கோடி (2020 இல் நிகர மதிப்பு 18 billion or US$230 மில்லியன்)
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
உயரம்
மேல் தளம்5
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை6
தளப்பரப்பு89,000 sq ft (8,300 m2)

இந்தக் கட்டிடம் 2010ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இதில் சட்டமன்றம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் அலுவலகம் போன்றவை செயல்பட்டு வந்தன. பிறகு இது மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

வரலாறு

தொகு

தமிழ் நாட்டின் முன்னோடியான சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றம் 1920 இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கவுன்சில் சேம்பர்ஸ் அரங்கத்தில் கூட்டப்பட்டது. 1937 வரை அங்கு செயல்பட்டது. 1937-39 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. பின் சிறிதுகாலம், அண்ணா சாலை அரசு அலுவலக வளாகத்தின் விருந்து அரங்கத்தில் (ராஜாஜி அரங்கம்) செயல்பட்டது. பின் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே 1952 இல் ஓமந்தூரார் அரசு வளாகத்தில் கலைவாணர் அரங்கம் கட்டப்பட்டு சட்டமன்றம் அங்கு மாற்றப்பட்டது. 1956 இல் மொழி வாரியாக மாநிலங்கள் அமைந்ததில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது. எனவே சட்டமன்றம் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. பின் 2010 வரை அங்கு செயல்பட்டது.[1][2][3]

இடமாற்ற முயற்சிகள்

தொகு

சட்டமன்றத்தை புதிய இடத்திற்கு மாற்றும் முயற்சிகள் முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமசந்திரனின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப் பட்டன. சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியதால் சட்டமன்றத்தையும், தலைமைச் செயலகத்தையும் திருச்சி நகருக்கு மாற்றி விடலாம் என்று ஆலோசிக்கப் பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 2002 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மாமல்லபுரம் அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒரு நிர்வாக நகரத்தை கட்ட திட்டமிட்டார். அதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) மலேசிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அந்நகரத்தை கட்டி முடிக்க 15-20 ஆண்டுகள் ஆகும் என்பதால் அத்திட்டம் கைவிடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு பதிலாக சென்னை மெரீனா கடற்கரையில் புதிய சட்டமன்றம் அமையும் என்றும் அறிவித்தார். புதிய சட்டமன்றத்திற்காக முதலில் லேடி வில்லிங்க்டன் கல்லூரி வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அதன் பரப்பளவு பத்தாது என்பதால், அதற்கு பதில் முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள ராணி மேரி கல்லூரி தேர்ந்தெடுக்கப் பட்டது. கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், அத்திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்து 2004 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கோட்டூர்புரம் அருகே புதிய சட்டமன்றத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆனால் அத்திட்டமும் விரைவில் கைவிடப்பட்டது.[4]

புதிய வளாகம்

தொகு

2007 இல் திமுக ஆட்சி காலத்தில் அண்ணா சாலை ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்கப் படுமென முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார். வளாக வடிவமைப்பிற்கான போட்டியில் ஜெர்மனியின் ஜிஎம்பி இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டது. 2008 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈசிசிஐ (ECCI) நிறுவனத்திடம் கட்டுமானப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம் இதற்கு முன் வள்ளுவர் கோட்டம் போன்ற அரசு கட்டிடங்களைக் கட்டியுள்ளது. வளாகத்தின் கட்டுமானம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. புதிய கட்டிடத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.[5][6]

 

எண்பதாயிரம் சதுர அடி அலுவலகப் பரப்புள்ள (office space) புதிய வளாகம் 425 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தில் 2000 இருக்கை வசதி கொண்ட அரங்கமும், 500 உந்துகள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது. வளாகத்தின் மையப் பகுதியில் திராவிடக் கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடிய 100 அடி உயரமும் 120 அடி குறுக்களவும் கொண்ட கோபுரம் ஒன்று உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பசுமைக் கட்டிடங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன. வளாகத்தின் முதல் கட்டம் 2010 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது. மார்ச் 13 2010 இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதனைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் சோனியா காந்தி, ஆந்திர, கர்நாடக மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 16 முதல் தமிழ் நாடு சட்டமன்றம் புதிய வளாகத்தில் கூடத்தொடங்கியது.[7]

மருத்துவமனையாக மாற்றம்

தொகு

2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் கட்டிடத்தை கைவிட்டுவிட்டு பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறியது. மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சட்டப் பேரவை மருத்துவமனையாகவும் தலைமைச் செயலகம் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை அடுத்து பிப்ரவரி 2013 முதல் மருத்துவமனையாக மாற்றும் பணி தொடங்கியது.

மருத்துவமனை திறப்பு

தொகு

ஆறு மாடிகளைக் கொண்ட மருத்துவமனை 21 பிப்ரவரி 2014ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் 400 படுக்கையறைகள் அமைந்துள்ளன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ramakrishnan, T (11 March 2010). "State-of-the-art Secretariat draws on Tamil Nadu's democratic traditions". The Hindu. Archived from the original on 15 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ramakrishnan, T. (19 April 2008). "New Assembly complex to have high-rise building". தி இந்து. Archived from the original on 22 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Ramakrishnan, T (13 March 2010). "Another milestone in Tamil Nadu's legislative history". தி இந்து. Archived from the original on 17 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The story of the search". Archived from the original on 2010-03-16. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  5. "Ex-MLA files case against secretariat". Archived from the original on 2018-09-28. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  6. "HC not to stay construction of new assembly building". Timesofindia. 25 Feb 2010. p. 4. http://www.timesofindia.com. பார்த்த நாள்: 25 Feb 2010. 
  7. "Tamil Nadu's Legislature gets a grand, green home". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.