மருத்துவமனை
மருத்துவமனை (Hospital) என்பது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு சிறப்பு சுகாதார நிறுவனம் ஆகும். இங்கு மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், சுகாதாரத்தை பராமரிக்க உதவும் இதர பணியாளர்கள் மருத்துவ உபகரணங்களுடன்[1] மருத்துவ சேவைக்காக பணியாற்றுகிறார்கள். பொது மருத்துவமனை என்பது அனைவராலும் அறியப்படும் ஒரு வகை மருத்துவமனையாகும். குறிப்பாக இம்மருத்துவமனையில் அவசரப் பிரிவு என்று தனியாக ஒர் அலகு செயல்படுகிறது. தீ விபத்து, முதல் சாலை விபத்து மற்றும் திடீர் நோய்கள் வரை பாதிக்கப்படும் நோயாளிகள் பலருக்கும் உடனடியாக சிகிச்சையளிக்க இந்த அவசரப் பிரிவு இயங்குகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் மாவட்ட மருத்துவமனை அப்பிராந்தியத்திற்கான முக்கியமான சுகாதார வசதியாகும். இங்கு தீவிர சிகிச்சைக்காக பல படுக்கைகளும் நீண்டகால பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகளும் இருக்கும். அடி, விபத்து போன்றவற்றால் உண்டாகும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் அவசரப்பிரிவு மருத்துவமனை, புணர்வாழ்வு மருத்துமனை, குழந்தைகள் மருத்துவமனை, மூத்தோர் மருத்துவமனை, மனநல மருத்துவமனை, தனித்தனியான நோய்க்கான மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் அனைத்தும் சிறப்பு மருத்துவமனைகள் ஆகும். சிறப்பு மருத்துவமனைகள் பொது மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது சுகாதார செலவினங்களைக் குறைக்க உதவும்[2]. பெறப்பட்ட வருமான ஆதாரங்களைப் பொறுத்து மருத்துவமனைகள் பொது மருத்துவமனை, சிறப்பு அல்லது அரசு மருத்துவமனை என வகைப்படுத்தப்படுகின்றன.
கற்பித்தலுடன் இணைந்த மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கற்பித்தலுடன் மக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஒரு மருத்துவமனையை விட சிறிய மருத்துவ வசதி கொண்ட சிகிச்சை மையமும் பொதுவாக ஒரு மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் பல்வேறு வகையான துறைகள் இயங்குகின்றன. அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை இருதயவியல், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம், புற்றுநோய் பிரிவு , குழந்தைகள் பிரிவு போன்ற பல சிறப்பு பிரிவுகள் தனித்தனியாக இயங்குகின்றன. சில மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவுகளும், நாள்பட்ட நோய்சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. மருந்தகம், நோயியல் மற்றும் கதிரியக்கவியல் போன்ற துறைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுவாக காணப்படுகின்றன.
மருத்துவமனைகள் பொதுவாக இலாபம் அல்லது இலாப நோக்கற்ற பொதுத்துறை சுகாதார நிறுவனங்கள் ஆகும். சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது நேரடியாக தொண்டு செய்யும் நன்கொடை அளிப்போர்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன . வரலாற்று ரீதியாக, மருத்துவமனைகள் பெரும்பாலும் மத உத்தரவுகளால் அல்லது தொண்டு நபர்கள் மற்றும் தலைவர்களால் நிறுவப்பட்டு நிதியளிக்கப்பட்டன[3].
தற்போது பெரும்பாலும் தொழில்முறை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார பயிற்சியாளர்கள் மருத்துவமனைகளில் பணியாற்றுகிறார்கள். கடந்த காலங்களில், இந்த பணிகள் வழக்கமாக மத உத்தரவுகளை நிறுவும் உறுப்பினர்களால் அல்லது தன்னார்வலர்களால் செய்யப்பட்டன. 1990 களின் பிற்பகுதியில் மருத்துவமனை ஊழியத்தில் கவனம் செலுத்தும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த குறிப்பாக கிறித்துவ சகோதர சகோதரிகள் சுகாதாரப் பணியை புனிதப் பணியாகக் கருதி மருத்துவமனைகளை நடத்துகின்றனர், பணியாற்றுகின்றனர் [4]. மருத்துவமனை என்ற சொல்லுக்கு விருந்தோம்பும் இடம் என்பது மிகச்சரியான ஒரு பொருளாகும். இப்பொருள் இன்றும் கூட செல்சியா இராயல் மருத்துவமனை போன்ற சில மருத்துவமனைகளில் காப்பாற்றப்பட்டு வருகிறது.
பெயர்க்காரணம்
தொகுஇடைக்காலத்தில், மருத்துவமனைகள் நவீன நிறுவனங்களிலிருந்து பெற்ற வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்தன. இடைக்கால மருத்துவமனைகள் ஏழைகளுக்கான தரும இல்லங்கள், யாத்ரீகர்களுக்கான விடுதிகள் அல்லது மருத்துவமனை பள்ளிகளாக செயல்பட்டன. மருத்துவமனை என்ற சொல் இலத்தீன் மொழியில் விருந்தோம்பலைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்ததாகும். ஒரு அந்நியன் அல்லது வெளிநாட்டவரை ஒரு விருந்தினராக, நண்பராக வரவேற்று உபசரிப்பது என்ற பொருளை இச்சொல் குறிக்கிறது. விருந்தோம்பலே பின்னர் விடுதி, விருந்தினர் மாளிகை,, தங்குமிடம் என்றெல்லாம் மாற்றம் கண்டது.
வகைகள்
தொகுசில நோயாளிகள் நோயறிதலுக்காக மட்டும் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் அங்கு இரவு தங்காமல் வெளியேறுகிறார்கள். சில நோயாளிகள் ஓர் இரவுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் அல்லது பல நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்கள் உள்நோயாளிகளாக தங்கியிருக்கிறார்கள். மருத்துவமனைகள் பொதுவாக மற்ற வகை மருத்துவ வசதிகளிலிருந்து வேறுபடுகின்றன, உள்நோயாளிகளை அனுமதிக்கும் மற்றும் பராமரிக்கும் திறனால் அவை சிறியவை, பெரியவை என்று விவரிக்கப்படுகின்றன.
துறைகள்
தொகுமருத்துவமனைகள் பல துறைகளால் ஆக்கப்பட்டுள்ளன. அவை பாரம்பரியமாக வார்டுகள் என்று அழைக்கப்படுகின்றன, குறிப்பாக உள்நோயாளிகளுக்கு படுக்கைகள் இருக்கும்போது, அவை சில நேரங்களில் உள்நோயாளிகளின் வார்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு அல்லது சிறப்பு சிகிச்சை மையம், தீப்புண் பிரிவு, அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இருக்கலாம். பின்வருபவை போன்ற கூடுதல் நிபுணர்களி சிகிச்சையளிக்கப்படும் பிரிவுகளும் இருக்கலாம்.
- அவசர சிகிச்சைப் பிரிவு
- இதய நோய் பிரிவு
- தீவிர சிகிச்சைப் பிரிவு
- குழந்தைகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவு
- புதியதாய் பிறந்த குழந்தைகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவு
- இதய தீவிரச் சிகிச்சைப் பிரிவு
- நரம்பியல்
- புற்றுநோயியல்
- மகளிர் மருத்துவம்
- பிரசவ பிரிவு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hospitals". World Health Organization (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
- ↑ "India's 'production line' heart hospital". bbcnews.com. 1 August 2010. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ Hall, Daniel (December 2008). "Altar and Table: A phenomenology of the surgeon-priest". Yale Journal of Biology and Medicine 81 (4): 193–98. பப்மெட்:19099050. "Although physicians were available in varying capacities in ancient Rome and Athens, the institution of a hospital dedicated to the care of the sick was a distinctly Christian innovation rooted in the monastic virtue and practise of hospitality. Arranged around the monastery were concentric rings of buildings in which the life and work of the monastic community was ordered. The outer ring of buildings served as a hostel in which travellers were received and boarded. The inner ring served as a place where the monastic community could care for the sick, the poor and the infirm. Monks were frequently familiar with the medicine available at that time, growing medicinal plants on the monastery grounds and applying remedies as indicated. As such, many of the practicing physicians of the Middle Ages were also clergy.".
- ↑ Lovoll, Odd (1998). A Portrait of Norwegian Americans Today. U of Minnesota Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-2832-2.
புற இணைப்புகள்
தொகு- "Global and Multilanguage Database of public and private hospitals". hospitalsworldguide.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-07-31. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.
- "Directory and Ranking of more than 17.000 Hospitals worldwide". hospitals.webometrics.info (in ஆங்கிலம்).
- "Medical History" (in en). Open Access Scholarly Journal. https://www.ncbi.nlm.nih.gov/pmc/journals/228/.