சென்னை அரசுப் பொது மருத்துவமனை

சென்னை அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இது சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.[1]

ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை
தமிழ்நாடு அரசு
ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை - சென்னை
அமைவிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பார்க் டவுன்,, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மருத்துவப்பணி பொதுமருத்துவமனை
வகை முழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவ கல்லூரி
இணைப்புப் பல்கலைக்கழகம் சென்னை மருத்துவக் கல்லூரி
படுக்கைகள் 2,722
நிறுவல் 1664
வலைத்தளம் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை
பட்டியல்கள்

16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் சர் எலிஹு யேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.

தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த ஜெ. ஜெயலலிதா 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.[2]

வரலாறு

தொகு
 
அரசுப் பொது மருத்துவமனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பண்டைய இந்திய அறுவை சிகிச்சை முறையின் ஒரு படம்
 
சென்னை அரசுப் பொது மருத்துவனை

1664 நவம்பர் 16 அன்று அரசு பொது மருத்துவமனை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் போர்வீரர்களின் நலனுக்காக ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. இதன் முதல் நிருவனராக இருந்தவர் சென்னை மாகானத்தின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவராக இருந்த சர் எட்வர்ட் (Edward Winter (English administrator)) அயராத எழுச்சியூட்டும் முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டது.[3] அரசு பொது மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகளாக ஒரு சாதாரண மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்ந்தது வந்தது. அப்போதைய ஆளுநர் சர் எலிகூ யேல் யேல் பல்கலைக்கழகம் ஆரம்ப புரவலர் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக 1690 ஆண்டு காலகட்டங்களில் மிகவும் உதவி செய்தார்.

1772ல் மருத்துவமனை ஆங்கிலோ பிரஞ்சு போருக்கு (War of the Austrian Succession) பின்னர் கோட்டைக்கு வெளியே தற்போதைய நிரந்தர இடத்தில் அமைய அப்போதைய சென்னை மாகாணத்தில் 20 ஆண்டுகள் பிடித்தன.[4]

செயல்பாடு

தொகு
 
முதற் கட்டடத்தின் வரவேற்பு அறை
 
மருத்துவமனையின் தளமொன்றில் உள்ள தாழ்வாரம்

2013-ஆம் ஆண்டுக் கணக்கின் படி நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 வெளி நோயாளிகள் வரை வருகின்றனர்.[5] 2012 மார்ச்சு மாதம் இம்மருத்துவமனை 1000 -ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையினைச் செய்தது. இந்திய அரசு மருத்துவமனைகளிலேயே இதுதான் அதிகப்படியானதாகும்.[6][7]

மேலும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-18. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
  3. medical capital’s place in history
  4. "History: 1639 A.D. TO 1700 A.D." ChennaiBest.com. Archived from the original on 2012-10-09. பார்க்கப்பட்ட நாள் 19-Sep-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. "GH in Chennai to celebrate 350 years in Nov.". The Hindu (Chennai: The Hindu). 21 September 2013. http://www.thehindu.com/news/cities/chennai/gh-in-chennai-to-celebrate-350-years-in-nov/article5151076.ece. பார்த்த நாள்: 21 Sep 2013. 
  6. Kumar, G. Pramod (21 March 2012). "Once capital of illegal kidney trade, Chennai now a pioneer in transplants". Firstpost.com (Firstpost.India). http://www.firstpost.com/india/once-capital-of-illegal-kidney-trade-chennai-now-a-pioneer-in-transplants-251460.html. பார்த்த நாள்: 15 Sep 2012. 
  7. "Govt hospital performs its 1000th kidney transplant". Health India.com (Health.India.com). 21 March 2012 இம் மூலத்தில் இருந்து 7 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120807031647/http://health.india.com/news/govt-hospital-performs-its-1000th-kidney-transplant/. பார்த்த நாள்: 15 Sep 2012.