யேல் பல்கலைக்கழகம்

யேல் பல்கலைக்கழகம் (Yale University), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும்.

Yale University
யேல் பல்கலைக் கழகம்
முந்தைய பெயர்கள்
Collegiate School
குறிக்கோளுரைאורים ותמים (Hebrew) (Urim V'Tumim)
Lux et veritas (இலத்தீன்)
(Light and truth)
வகைதனியார்
உருவாக்கம்1701
நிதிக் கொடைUS $22.5 பில்லியன்[1]
தலைவர்Peter Salovey
கல்வி பணியாளர்
3,333
மாணவர்கள்11,398
பட்ட மாணவர்கள்5,316
அமைவிடம், ,
வளாகம்Urban, 397 ஏக்கர்கள் (1.1 கி.மீ²)
நிறங்கள்Yale Blue since 1894; prior color, green
தடகள விளையாட்டுகள்NCAA Division I (FCS Football) Ivy League
சுருக்கப் பெயர்Bulldogs, Elis, Yalies
நற்பேறு சின்னம்Handsome Dan
இணையதளம்www.yale.edu

இப் பலகலைக்கழக தெற்காசியவியல் துறை தமிழ் பாடங்களை வழங்குகிறது.[2]

1701 இல், கனெக்டிகட் பகுதியில் நிறுவப்பட்டு, அமெரிக்காவிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலேஜியேட் ஸ்கூல் எனப் பெயரிடப்பட்டு, 1718 இல், யேல் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுநரான எலிகு யேல் என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில், இதன் உறுப்பான கலை, அறிவியல் பள்ளி, முனைவர் பட்டத்தை வழங்கியது. அமெரிக்காவிலேயே முதலில் முனைவர் பட்டம் வழங்கிய நிறுவனம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. [3] 1900 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டைமைப்பை நிறுவியதில் இந்தப் பல்கலைக்கும் பங்குண்டு. தற்போது 12 கல்லூரிகள் இயங்குகின்றன. இன்னும் இரண்டு வரவுள்ளன.

இங்கு 1,100 ஆசிரியர்களும், 5,300 இளநிலைப் பட்டதாரிகளும், 6,100 முதுநிலைப் பட்டதாரிகளும் உள்ளனர். [4][5] பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு $20.80  பில்லியன் ஆகும். உலகில், அதிகளவு சொத்தைக் கொண்ட கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள நூலகங்களில் 12.5  மில்லியன் நூல்கள் உள்ளன. [6] இதனுடன் தொடர்புடையவர்களில் 51 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆவர். அமெரிக்க பிரதமர்கள், அமெரிக்க நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட்ட பலர் இங்கு படித்துள்ளனர். [7]

என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய விளையாட்டுகளில், யேல் புல்டாக்ஸ் என்ற பெயரில் களமிறங்குவர்.மாணவர் அமைப்புகள்

தொகு

இங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு குழுக்களில் பங்கெடுக்கின்றனர். மாணவர்கள் இயக்கும் செய்தித்தாள், வானொலி, இலக்கியக் குழுக்களும், திரைக் குழுக்களும் உள்ளன. யேல் புல்டாக்ஸ் குழுவும் இதில் அடங்கும். யேல் வானொலியை மாணவர்களே இயக்குகின்றனர்.

தடகளம்

தொகு
வால்டர் கேம்ப் வாயில், யேல் தடகள மையம்

இங்கு 35 ஆட்டக் குழுக்கள் உள்ளன. இவ ஐவி லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. என்.சி.ஏ.ஏ. போட்டிகளிலும் இவை பங்கெடுப்பதுண்டு. விளையாட்டுத் திடல்களும் உள்ளன. பெரிய அளவிலான உடற்பயிற்சியகம் இங்குள்ளது. இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாய்மரப் படகோட்டம், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆட்டங்களும் விளையாட்டப்படுகின்றன.

கல்லூரிகள்

தொகு

இதனுடன் இணைந்த சில தங்கிப் படிக்கும் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் பெர்க்லி, பிரான்போர்டு, கல்ஹவுன், டாவ்ன்போர்ட், டிரம்புல் ஆகியன குறிப்பிடத்தக்கன.

நிர்வாகம்

தொகு

தலைவரும், நிர்வாகக் குழுவினரும் இணைந்து பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்றனர். இதன் தலைவர், அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார். [8]

கட்டிடங்கள்

தொகு
 • பேட்டல் ஆலயம்
 • பெய்நெக்கே நூலகம் (அரிய நூல்களைக் கொண்டது)
 • ஹார்க்னஸ் டவர்
 • இங்கல்ஸ் ரிங்க்
 • கிளின் உயிரியல் கட்டிடம்
 • ஆஸ்போர்ன் நினைவு ஆய்வுக்கூடங்கள்
 • பேய்னே விட்னே உடற்பயிற்சியகம்
 • பீபாடி வரலாற்று அருங்காட்சியகம்
 • ஸ்டெர்லிங் மருத்துவ அறை
 • ஸ்டெர்லிங் சட்டக் கட்டிடங்கள்
 • ஸ்டெர்லிங் நினைவு நூலகம்
 • யேல் கலைக்காட்சியம்
 • யேல் கட்டிடக்கலை கட்டிடம்

கல்வி நிறுவனங்கள்

தொகு
நிறுவனங்கள்
பள்ளி
ஆண்டு
யேல் மருத்துவப் பள்ளி
1810
யேல் ஆன்மீகப் பள்ளி
1822
யேல் சட்டப்பள்ளி
1843
யேல் கலை, அறிவியல் பள்ளி
1847
ஷெஃபீல்டு அறிவியல் பள்ளி
1847
யேல் கவின் கலைப் பள்ளி
1869
யேல் இசைப் பள்ளி
1894
யேல் சுற்றுச்சூழலியல் பள்ளி
1901
யேல் பொதுநலப் பள்ளி
1915
யேல் நர்சிங் பள்ளி
1923
யேல் நாடகப் பள்ளி
1955
யேல் மேலாண்மைப் பள்ளி
1976

யேல் பல்கலையின் முன்னெடுப்புகளில் சில:

 • உலகளவில் கல்வியை மேம்படுத்த, ஜாக்சன் இன்ஸ்டிடியூட்
 • உலக சுகாதாரத்தை மேம்படுத்த, உலக சுகாதார முன்னெடுப்பு
 • யேல் இந்தியா முன்னெடுப்பு, இந்தியாவுடனான கல்வி உறவை மேம்படுத்த
 • யேல் சீனச் சட்ட மையம், சீனாவில் சட்ட விதிகளை ஊக்குவிப்பதற்காக
 • யேல்- சிலி பல்கலைக்கழகம் கூட்டு - வானியல் ஆய்விற்காக
 • பீக்கிங்-யேல் பல்கலைக்கழகம் கூட்டு - தாவர மரபணுவியல், வேளாண் உயிரியல்
 • டோதாய் - யே முன்னெடுப்பு - ஜப்பானைப் பற்றிப் படிக்க
 • ஃபூடன் - யேல் உயிர்மருத்துவ ஆய்வு மையம் - சாங்காய் நகரில்
 • யேல் -லண்டன் பல்கலைக்கழக கூட்டு
 • பெருவில் யேல் மையம், மச்சு பிச்சு, இன்கா நாகரிகம் பற்றி அறிய
 • சிங்கப்பூர் தேசியப் பல்கலையுடன் கூட்டு - ஆசியாவில் கலைக் கல்வியை மேம்படுத்த

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்

தொகு
 
அமெரிக்க நடிகை - மெரில் ஸ்ட்ரீப், 1975, யேல் நாடகக் கல்லூரி
 
அமெரிக்கப் பிரதமர் வில்லியம் டாஃப்ட், 1878 இல் யேல் பல்கலையில் பட்டம் பெற்றார்

யேல் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இவர்களுள் குறிப்பிடத்தவர்கள்: (பதவியும், பெயரும்)

மேற்கோள்கள்

தொகு
 1. "Yale Endowment Grows 28%, $22 பில்லியனைத் தாண்டுகிறது". New York Times. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
 2. தெற்காசியவியல் வகுப்புகள்
 3. "Academic programs | Yale". Yale.edu. பார்க்கப்பட்ட நாள் September 16, 2009.
 4. Lu, Carmen (October 15, 2009). "Undergraduate teaching requirement a myth". Yale Daily News. Archived from the original on டிசம்பர் 17, 2009. பார்க்கப்பட்ட நாள் December 4, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 5. Yale.edu[தொடர்பிழந்த இணைப்பு]
 6. "Yale University Library: Libraries & Collections A-Z". Library.yale.edu. July 10, 2006. பார்க்கப்பட்ட நாள் September 16, 2009.
 7. "2009 Raw Data Law School Rankings: Acceptance Rate (Ascending)". Internet Legal Research Group. பார்க்கப்பட்ட நாள் April 29, 2012.
 8. de Vise, Daniel (November 15, 2010). "Million-dollar college presidents on the rise". Washington Post: p. B1. 

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேல்_பல்கலைக்கழகம்&oldid=3837557" இலிருந்து மீள்விக்கப்பட்டது