நோவா வெப்ஸ்டர்

நோவா வெப்ஸ்டர் (Noah Webster, அக்டோபர் 16, 1758 - மே 28, 1843) அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும் எழுத்திலக்கணத்திற்கும் காரணியானவர். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

நோவா வெப்ஸ்டர்
Noah Webster pre-1843 IMG 4412.JPG
பிறப்பு16 அக்டோபர் 1758
West Hartford
இறப்பு28 மே 1843 (அகவை 84)
நியூ ஹேவன்
படித்த இடங்கள்
பணிசொற்களஞ்சிய ஆசிரியர்
நோவா வெப்ஸ்டர்

1783 இல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவரும் இவரேயாவர்.

அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே ஆவார். பிரித்தானிய ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என்பது நோவா வெப்ஸ்டர் கருத்து. அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தியவருமாவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_வெப்ஸ்டர்&oldid=2733772" இருந்து மீள்விக்கப்பட்டது