அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார்.[3] திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.[4]

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மகேஷ்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 7, 2021
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 25, 2016
தொகுதி திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு 2 திசம்பர் 1977 (1977-12-02) (அகவை 44)
திருச்சிராப்பள்ளி
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஜனனி
இருப்பிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.[5]

மேற்கோள்கள்தொகு