தமிழ்நாடு அரசுத் துறைகள்
தமிழ்நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களின் நலனுக்காகப் பல்வேறு அரசுத்துறைகள் 1670-ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்டு வருகின்றன. இத்துறைகளின் தலைவராக மாநில முதலமைச்சரும் ஆலோசனை மற்றும் ஒழுங்குபடுத்த தலைமைச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டன.
Tamil Nadu Government's Departments | |
அரசுத் துறைகள் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1670 |
ஆட்சி எல்லை | தமி்ழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் | |
அரசுத் துறைகள் தலைமை |
|
வலைத்தளம் | http://www.tn.gov.in/departments.html |
தமிழ்நாடு அரசுத்துறைகளின் வளா்ச்சி
தொகு1600-களில்
தொகு- 1670: அரசு பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டு 1670-இல் புதிய செயலகம் உருவாக்கப்பட்டது. அரசின் பொருளாதார நிலையைச் சீர்படுத்தும் இத்துறையைக் கவனிக்க செயலர் ஒருவரை நியமித்திருந்தனர். மேலும் இத்துறையானது, மதராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலக துறையாகவும் கருதப்பட்டது.
1700-களில்
தொகு- 1752: பிரஞ்சுகாரர்களிடம் போர் புரிந்ததாலும் ஆற்காடு நவாப்புடன் பிணக்கம் ஏற்பட்டதினாலும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கம், இந்தியா முழுவதிலும் பரவியது. அதே நேரத்தில், தனது ஆதிக்க சக்தியால், பல்வேறு துறைகளை அரசு என்பதற்குள் கொண்டு வந்து, புதிய துறைகளை உருவாக்கியது ஆங்கிலேய அரசு. 1752-இல் தனது முதலாவது துறையாக, இராணுவத் துறையை உருவாக்கினர்.
- 1774: பின்னர் தனது அடுத்த துறையாக வருவாய்த் துறையை 1774-இல் உறுவாக்கினர். பொதுத் துறையலுள்ள வருமானம் தொடர்பான ஆவணங்களை இதனுள் புகுத்தினர். பின் இரட்டச் செயலக முறையை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு செயலகத்தின் கீழ், இராணுவம், அரசியல் மற்றும் இரகசிய ஆவணங்களையும், இரண்டாவது செயலகத்தின் கீழ், பொதுத் துறையையும், வருமானத் துறையையும் கொண்டு வந்தனர்.
- 1786: 1786-இல் அரசின் வருவாய்க்காக நான்கு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அவை 'வருவாய் வாரியம்', 'வணிக வாரியம்', 'இராணுவ வாரியம்', 'மருத்துவ வாரியம்' மற்றும் 'கடல் வாரியம்'. மற்ற கூடுதல் துறைகளும் இவ்வாரியங்களின் கீழ் அமைக்கப்பட்டன.
- 1796: மே மாதம் 1796-இல் 'இரகசியத் காப்புத் துறை', செயலகத்தில் நிறுவப்பெற்றது. இதில், நாட்டின் இரகசியம் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சேர்க்கப்பட்டன.
- 1798: 1798-இம் ஆண்டில், நீதித்துறை உருவாக்கப்பட்டது.
1800-களில்
தொகு- 1800: 1800-இல், செயலக கட்டமைப்பு புதுப்பொலிவு பெற்று, ஒரு தலைமைச் செயலாளர் மற்றும் மூன்று செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அரசியல் மற்றும் இரகசியத் துறை தலைச்செயலாளருக்கும் இராணுவத்துறை ஒரு செயலாளர்க்கும் வழங்கப்பட்டது. மேலும் வணிகம் மற்றும் பொதுத்துறை இரண்டாம் செயலாளருக்கும், வருவாய் மற்றும் நீதித்துறை மூன்றாமவருக்கும் ஒதுக்கப்பட்டன. அடுத்ததாக அரசியல் விவகாரங்களைக் கையாளுவதற்கான அரசியல் துறையும் உருவாக்கப்பட்டது.
- 1811 - 1818: 1811 முதல் 1818 வரையுள்ள ஆண்டுகளில், வணிக வியாபாரத்தைப் பெருக்க, பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.
- நிதித் துறை (1811)
- வர்த்தக துறை (1815)
- சட்டத் துறை (1815)
- வெளிநாட்டுத் துறை (1816)
- சமயத் துறை (1818)
- 1831: 1831-ஆம் ஆண்டில், செயலகத்துறைகள் மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டது. தலைமைச் செயலரின் பொறுப்பாக நிதி, சட்டம், வர்த்தகம், சமயம் மற்றும் பொதுத்துறைகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே கொடுக்கப்பட்ட துறைகளுடன் இத்துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டவையாகும்.
- 1838 - 1853: 1838 முதல் 1853 வரையுள்ள ஆண்டுகளல், ஆட்சித்துறையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.
- கடல் துறை (1838)
- பொதுப்பணித்துறை (1843)
- இரயில்வே துறை (1853)
- 1855: 1855-இல் ஆட்சித்துறைக்காகச் செயலக செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் விளைவாக, அரசியல், நீதி, பொதுத்துறை ஆகியவைகள் தலைமைச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன. வருவாய் ஆட்சித்துறை, பொதுப்பணித்துறை, சாலை போக்குவரத்துத்துறை ஆகியவைகள் வருவாய்ச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன.
- 1857: 1857-ஆம் ஆண்டிற்குப் பின், மதராஸ் மாகாணம் முழுவதும் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து இங்கிலாந்து மகாராணியின் நேரடிப் பார்வையின் கீழ் வந்தது. தலைமைச் செயலாளருக்கு, வருவாய், நீதி, அரசியல் மற்றும் சட்டமன்றத் துறைகள் வழங்கப்ப்ட்டன.
1900-களில்
தொகு- 1914
1914-இல், செயலகத் துறைகள் மீண்டும் ஒருமுறை மாற்றியமைக்கப்ட்டன
- இந்திய குடியியல் பணிக்கான அரசாணை, அரசாங்க அச்சகம், மதராஸ் பதிவு அலுவலகம், காவற்படைகள், காலாட்படையின் இயக்கம், நீதித்துறை, புலனாய்வுத்துறை மற்றும் பத்திரிகை சட்டம் முதலிய துறைகள் அனைத்தும் தலைமைச் செயலாளருக்கு வழங்கப்பட்டன.
- நகரமைப்புத் தகவல்கள் அனைத்தும் வருவாய்த்துறையினரின் கீழ் வந்தது.
- மனநலம் பாதிக்கப்ட்டோர் முதலான மருத்துவத் தகவல்கள் அனைத்தும் வருவாய்த்துறையினரின் கீழ் வந்தது.
- 1916
1916-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 1-ஆம் நாள், செயலகத்திலுள்ள துறைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டது.
- நிதித்துறை - தலைமைச் செயலாளர் (வருடாந்திர ஓய்வூதியம், வருவாய்க் கிளைகளையும் சேர்த்து)
- பொதுத்துறை - தலைமைச் செயலாளர் (பொது, கடல்சார், அரசியல், சமயம்)
- வருவாய்த்துறை - வருவாய்ச் செயலாளர்
- ஊரக வளர்ச்சி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறை - ஊரக வளர்ச்சி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் (மருத்துவம் மற்றும் சட்டமன்றப் பிரிவுகள்)
- உள்துறை - உள்துறைச் செயலாளர் (நீதி, கல்வி மற்றும் இதர துறைகள்)
- பொதுப்பணித்துறை - பொதுப்பணித்துறைச் செயலாளர் மற்றும் இணை செயலாளர்
- 1918
1918-ஆம் ஆண்டில், வருவாய்த்துறையினூடே சிறப்பு வருவாய்த் துறை உருவாக்கப்பட்டது. இதில் கப்பல் கட்டுமானப் பணியின் கணக்குகள், இந்திய பாதுகாப்பு படையின் தகவல்கள் அனைத்தும் அடங்கும். இத்துறையைக் கவனிக்க சிறப்பு வருவாய்த் துறைச் செயலாளர் நியமிக்கப்பட்டார்.
- 1921
செயலகத்தின் வர்த்தக பரிவர்த்தனைகளை ஆராய்ந்து, 1 ஏப்ரல் 1921-ஆம் நாள் அரசியல் மற்றும் சமயத்துறைகள் பொதுத் துறையிலிருந்து பரித்து வெவ்வேறு துறைகளாக்கப்பட்டன. இதனால் புதிய துறைகளும் உருவாக்கப்பட்டன.
- விவசாயத்துறை
- கூட்டுறவுத்துறை
- குடிமைப்பொருட்கள் துறை
- தொழிற்சாலைத்துறை
- வனத்துறை
- தொழிற்துறை
- சுரங்கத்துறை
- வணிகத்துறை
- கால்நடை பராமரிப்புத்துறை
- 1926
1926 சூலை 1-ஆம் நாள், செயலகத்தில் உள்ள செயலாளர்களுக்குத் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன
- தலைமைச் செயலாளர் - பொது, நீதி, அரசியல், சமயம்.
- செயலாளர் 1 - சட்டம், கல்வி
- செயலாளர் 2 - பாசனம், இரயில்வே, பொதுப்பணி, தெழிலாளர் நலன்
- ஏனைய துறைகள் ஒன்றிற்கு ஒரு செயலாளர் எனப் பிரிக்கப்பட்டது.
- 1936:
1936 ஏப்ரல் 1-ஆம் நாளில், துறைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒன்பது துறைகள் உறுவாக்கப்பட்டன:
- பொதுத்துறை
- உள்துறை
- நிதிதததுறை
- வளர்ச்சித்துறை
- வருவாய்த்துறை
- உள்ளூர் சுய அரசுத் துறை
- கல்வி மற்றும் மக்கள் நலத்துறை
- பொதுப்பணித்துறை
- சட்டத்துறை
- இத்துறைகள் 1 ஆகத்து 1936-ஆம் நாள் அமலுக்கு வந்தது.
- 1946
1946-ஆம் ஆண்டு, குடிமையியல் பொருள் வழங்கும் வருவாய் வாரியம் மாற்றியமைக்கப்பட்டு, நகர் மேம்பாட்டுத்துறையான உணவுத்துறை மற்றும் அதன் சார்ந்திருக்கும் துறைகள் உருவாக்கப்பட்டன.
- 1949
1949-இல், விவசாயத்துறையை, உணவுத்துறையுடன் சேர்த்து உணவு மற்றும் விவசாயத்துறை உருவாக்கப்பட்டது.
- புதிய துறை உருவாகினாலும், 1956-இல் உருவாக்கப்பட்ட விவசாயத்துறை பின்னரும் செயல்பட்டு வந்தது.
- 1953:
1953-இல், மைசூர் (கர்நாடகா) மாநிலத்திலிருந்து பிரிந்த ஏழு தாலுக்காக்களோடு ஆந்திர மாநிலம் உருவானபோது, செயலகம் மாற்றியமைக்கப்பட்டது.
- மேலும், சட்டத்துறையின் ஆங்கில வழிச்சொல் மாற்றமடைந்தது (Legal Department to Law Department).
- விவசாயத்துறை
- நிதித்துறை
- உடல் நலம், கல்வி மற்றும் உள்ளூர் சுய அரசுத் துறை
- உள்துறை
- தொழிற்சாலை, தொழிலாளர் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை.
- சட்டத்துறை
- பொதுத்துறை
- பொதுப்பணித்துறை
- வருவாய்த்துறை
- 1960:
- 1953-இக்குப் பின், சில புதிய துறைகள் சேர்க்கப்பட்டன
- 1960-இல் பதினோரு புதிய துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன
- கல்வித்துறை
- நிதித்துறை
- உணவு மற்றும் விவசாயத்துறை
- உள்துறை
- தொழிற்துறை
- சட்டத்துறை
- பொதுத்துறை
- மக்கள் நலத்துறை
- பொதுப்பணித்துறை
- வருவாய்த்துறை
- ஊரக வளர்ச்சி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறை
- 1998
தகவல் தொழில் நுட்பவியல் துறை 1998-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
துறைகளின் வகைகள்
தொகு- இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் மேற்பார்வையின் கீழுள்ள துறைகள்
- இந்தியக் காவல் பணி அதிகாரியின் மேற்பார்வையின் கீழுள்ள் துறைகள்
- இயக்குநர் (அ) ஆணையாளரின் மேற்பார்வையின் கீழுள்ள துறைகள்
- வருவாய்த் துறை (தமிழ்நாடு)
- பள்ளிக் கல்வித் துறை
- தொல்லியல் துறை
- ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
- வேளாண்மைத் துறை
- கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
- பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
- வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை
- கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
- எரிசக்தி
- சுற்றுச்சூழல் (ம) வனத்துறை
- கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
- மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை
- உயர்கல்வி துறை
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
- உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
- தொழில் துறை
- தகவல் தொழில் நுட்பவியல் துறை
- தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
- சட்டத்துறை
- சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
- நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
- பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தத் துறை
- பொதுத் துறை
- பொதுப்பணித் துறை
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- சமூக சீர்திருத்த துறை
- சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
- சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
- போக்குவரத்து துறை
- இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை
- தமிழ்நாடு காவல்துறை
- இந்து சமய அறநிலையத் துறை
- சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை
- தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை
- செயலகத் துறைகள்
- தமிழ்நாடு புள்ளியியல் திணைக்களம்
தமிழக அரசின் துறைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Government of Tamil Nadu - Departments". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/departments.html. பார்த்த நாள்: 2012-10-07.
- ↑ "CTamil Nadu Government Departments". http://cyberjournalist.org.in/. http://cyberjournalist.org.in/linkstn.html. பார்த்த நாள்: 2012-10-07.
- ↑ "List of Tamilnadu Government websites, Departments websites". http://www.tamilnow.com/. http://www.tamilnow.com/Departments-76/. பார்த்த நாள்: 2012-10-07.