பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதித்துறை மற்றும் மனிதவளத் துறை அமைச்சர்

பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் (P. T. R. Palanivel Thiagarajan, பிறப்பு: மார்ச் 7, 1966) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தையான மறைந்த பி. டி. ஆர். பழனிவேல் ராஜனும் ஒரு அரசியல்வாதி மற்றும் இவரது பாட்டனாரான, பொ. தி. இராஜனும் தமிழகத்தின் ஒரு முக்கியமான அரசியல்வாதியாவார். இவர் 2016 ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தொடர்ந்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நிதி அமைச்சசராக பதவியேற்றார்.

பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு தவகல் தொழினுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்மனோ தங்கராஜ்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்ஆர். சுந்தரராஜன்
தொகுதிமதுரை மத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1966 (1966-03-07) (அகவை 58)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்மார்கரெட் தியாகராஜன்
உறவுகள்பொ. தி. இராசன்
பிள்ளைகள்பழனி தேவன் ராஜன், வேல் தியாகராஜன்
பெற்றோர்பி. டி. ஆர். பழனிவேல்ராசன்
ருக்மணி
முன்னாள் கல்லூரிதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (பி.டெக்)
பஃபலோ பல்கலைக்கழகம், நியூயார்க்(முனைவர்)
எம்.ஐ.டி முகாமைத்துவப் பள்ளி(முதுகலை)
இணையத்தளம்Official Site

கல்வி

தொகு

தியாகராஜன் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியில் முன்பு மண்டலப் பொறியியல் கல்லூரி என அழைக்கப்பட்ட தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் முடித்து, பின்னர் தன் முதுநிலைப் பட்டப்படிப்பை செய்பணி ஆய்வில் முடித்து, பின்னர் முனைவர் பட்டத்தை நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் மனித காரணிகள் பொறியியல் / பொறியியல் உளவியலில், மேற்கொண்டார்.

தொழில்

தொகு

இவர் 1990 இல் ஆபரேஷன்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் மேம்பாட்டில் ஒரு சுயாதீன ஆலோசகராக தன் தொழில் வாழ்க்கையைத் துவக்கினார். பின்னர் இவர் 2001 இல் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக - ஃபர்ம் ரிலேஷன்ஷிப் கடன் சேவையில் சேர்ந்தார்.[3][4] பின்னர் அவர் லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனத்தை விட்டு விலகி, 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார்.[5][6] பின்னர் இவர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில், குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவில் பணியாற்றினார். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு அதைவிட்டு விலகினார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவரது மனைவியின் பெயர் மார்கரெட் தியாகராஜன் ஆவார். இவருக்கு பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.[8][9]

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 2016 ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நிதி மற்றும் மனிதவளத் துறை ( நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்) அமைச்சசராக பதவியேற்றார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu - Madurai Central 2016". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 22 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  2. "Elections Madurai Central Palanivel Thiagarajan". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  3. "This Former Lehman Banker Is Betting On Legacy In TN Polls". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  4. "From Wall Street to TN assembly polls: Will Thiagarajan be able to make his mark in politics?". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  5. "Wall Street banker P Thiaga Rajan contests elections from temple town Madurai - The Economic Times". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  6. Manthan India (2015-05-12). "The Collapse of Lehman Brothers - An Insider's Perspective with P T Rajan". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  7. Murali D (2014-11-13). "Dr P T Rajan, Former Managing Director, Financial Markets, Standard Chartered Bank". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  8. "This American is part of the campaign for Madurai Central - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  9. திமுக வேட்பாளர்கள் சுயவிவரம். தினமணி. 14 ஏப்ரல் 2016. {{cite book}}: Check date values in: |date= (help)
  10. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிவேல்_தியாகராஜன்&oldid=4050262" இலிருந்து மீள்விக்கப்பட்டது