மனோ தங்கராஜ்
டி மனோ தங்கராஜ் (T. Mano Thangaraj) என்பார் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சரும் ஆவார்.
டி. மனோ தங்கராஜ் | |
---|---|
மனோ தங்கராஜ் | |
பின்னவர் | பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2023 | |
முன்னையவர் | எஸ். எம். நாசர் |
முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 7 மே 2021 – 10 மே 2023 முதல் 28 செப்டம்பர் 2024 | |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2016 | |
முன்னையவர் | புஷ்பா லீலா அல்பான் |
தொகுதி | பத்மனாபபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1967 கருங்கல், சென்னை மாநிலம் (தற்போதைய தமிழ்நாடு), இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | தங்கராஜ் (தந்தை) |
கல்வி | ஆங்கில இலக்கியத்தில் முதுகலை |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | https://www.manothangaraj.com/ |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கருங்கல் நகரைச் சேர்ந்தவர். இவர் 1996 முதல் 2006 வரை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்துள்ளார். இவர் தனது கல்லூரி நாட்களிலிருந்தே அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். மார்த்தாண்டம் கிறித்தவ கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், தற்பொழுது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இவர் 1988ஆம் ஆண்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து போராட்டங்களை நடத்தியுள்ளார்.
சமூக செயல்பாடுகள்
தொகுஇவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் செயல்பட்டு வரும் குட் விஷன் நற்பணி மன்றத்தை நிர்வகித்து வருகிறார். [1]
அரசியல் வாழ்வு
தொகுஇவர் 2016 இல் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து] சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.[2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.2021 மே 7 அன்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சசராக பதவியேற்றார்.இதையடுத்து 2023 மே 11 அன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.ref>தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6</ref> தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றத்தை அடுத்து 28 செப்டம்பர் 2024 அன்று அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தேர்தல்கள்
தொகுஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற
வாக்குகள் |
வாக்ககுகள் % |
---|---|---|---|---|---|---|
2016 | 2016 தமிழக மாநில சட்டசபை தேர்தல் | திமுக | பத்மனாபபுரம் | வெற்றி | 76,249 | 47.2% |
2021 | 2021 தமிழக மாநில சட்டசபை தேர்தல் | திமுக | பத்மனாபபுரம் | வெற்றி | 87,734 | 51.57% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NGO licence in limbo? Move court". www.livemint.com.
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம் (PDF).
- ↑ "Tamil Nadu government firm on phased prohibition, says Minister". www.thehindu.com.
- ↑ "In the wake of Cyclone Ockhi, churches in Tamil Nadu fishing villages turn into protest hubs". scroll.in.