முதுகலை

குமுக அறிவியல், மாந்தவியல் சார்ந்து வழங்கப்பெறும் பட்டம்

முதுகலை ( இலத்தீன்: Magister Artium ஆங்கிலம்: Master of Arts : சுருக்கமாக MA) பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களால் முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். இது முதுகலை அறிவியல் பட்டத்துடன் முரண்படுகிறது.இதில் வரலாறு, இலக்கியம், மொழிகள், மொழியியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், தகவல் தொடர்பு ஆய்வுகள், சட்டம் அல்லது பண்ணுறவாண்மை போன்ற பாடங்களை மாணவர்கள் படித்திருப்பார்கள்.இருப்பினும், வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு மரபுகளைக் கொண்டுள்ளன. படிப்புகளை முடித்தல் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி, ஆராய்ச்சி அல்லது இரண்டின் கலவையைப் பொறுத்து பட்டம் வழங்கப்படலாம்.

முதுகலை
சுருக்கம்MA
AM
வகைமுதுநிலைப் பட்டம்
காலம்1 - 3 ஆண்டுகள் (மாறுதலுக்குட்பட்டது)

வட அமெரிக்கா தொகு

கனடா மற்றும் ஆமெரிக்காவில், முதுகலை மற்றும் முதுநிலை அறிவியல் ஆகியவை பெரும்பாலான பாடங்களில் அடிப்படை பட்டதாரி-நிலைப் பட்டங்களாகும், மேலும் அவை பாடநெறி அடிப்படையிலான, ஆராய்ச்சி அடிப்படையிலான அல்லது பொதுவாக, ஒரு இரண்டின் கலவையாகவும் இருக்கலாம். [1]

சான்றுகள் தொகு

  1. Structure of the U.S. Education System: Master's Degrees, International Affairs Office, U.S. Department of Education, February 2008, பார்க்கப்பட்ட நாள் 2010-02-25
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகலை&oldid=3821917" இலிருந்து மீள்விக்கப்பட்டது