முதன்மை பட்டியைத் திறக்கவும்

கருங்கல் (ஊர்)

கருங்கல்(Karungal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும்.

கருங்கல்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

16,691 (2011)

882/km2 (2,284/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.93 சதுர கிலோமீட்டர்கள் (7.31 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/karungal

அமைவிடம்தொகு

கருங்கல் பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலிருந்து 5 கிமீ தொலைவில் பள்ளியாடி தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே 10 கிமீ தொலைவில் தக்கலை; வடக்கே மார்த்தாண்டம் 8 கிமீ தொலைவிலும்; தெற்கே குளச்சல் 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

18.93 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் வகைப்பாடுதொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,368 வீடுகளும், 16691 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]இவர்களில் 8,030 ஆண்களும்,8,661 பெண்களும் ஆவார்கள்.10.07% அதாவது இவர்களில் 1,680 பேர் ஆறு வயதுக்குட்பட்டோராவர்.இங்கு சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1,076 பெண்கள் என்ற விதத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 91.91 சதவீத மக்கள் கருங்கலில் கல்வியறிவு பெற்றோர் ஆவர். இதில் ஆண்கள் 94.35 சதவீதமும்,பெண்கள் 89.81 சதவீதமும் ஆகும்.

சமயம்தொகு

கருங்கலின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 34.68 சதவீதம் இந்துக்களும், 0.25 சதவீதம் முஸ்லீம்களும், 64.75 சதவீதம் கிறிஸ்தவர்களும், 0.30 சதவீதம் என்ற அளவில் ஏனய மதத்தினரும் வசிக்கின்றனர்..

தொழில்கள்தொகு

இப்பகுதியில் விவசாயம் மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது.அதற்கு காரணம் விவசாய நிலம் அரிதாகிப்போனதே.பெரும்பாலான மக்கள் கூலிவேலையிலேயே ஈடுபடுகின்றனர்.வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் இப்பகுதி மக்கள் பொருளீட்டுவதற்காக பயணிக்கின்றனர்.கணிசமானோர் இராணுவம் போன்ற சேவைச்சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்_(ஊர்)&oldid=2680347" இருந்து மீள்விக்கப்பட்டது