கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 39வது தொகுதி ஆகும்.

கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி
Kanniyakumari lok sabha constituency (Tamil).png
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-2008 மறுசீரமைப்பிற்குப் பிந்தையது
காலம்2009-நடப்பு (1957-2004 முந்தைய நாகர்கோவில் தொகுதி)
தற்போதைய மக்களவை உறுப்பினர்காலியிடம்
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,77,161[1]
சட்டமன்றத் தொகுதிகள்229. கன்னியாகுமரி
230. நாகர்கோவில்
231. குளச்சல்
232. பத்மநாபபுரம்
233. விளவங்கோடு
234. கிள்ளியூர்

தொகுதி மறுசீரமைப்புதொகு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. கன்னியாகுமரி
  2. நாகர்கோவில்
  3. குளச்சல்
  4. பத்மநாபபுரம்
  5. விளவங்கோடு
  6. கிள்ளியூர்

இடைத்தேர்தல், 2021தொகு

2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இத்தொகுதியின் உறுப்பினர் எச். வசந்தகுமார் 28 ஆகத்து 2020 அன்று மறைந்தபடியால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொகுதிக்கு புதிய மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.[2][3]பொன். இராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[4][5][6]

தேர்தல் முடிவுகள்தொகு

நடந்து முடிந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 2021 இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் விட 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]

வென்றவர்கள்தொகு

 திமுக     பா.ஜ.க    காங்கிரசு  

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 ஜெ. ஹெலன் டேவிட்சன் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி
2019 எச். வசந்தகுமார்
(இறப்பு: 28 ஆகத்து 2020)
இந்திய தேசிய காங்கிரசு
2021 விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரசு

வாக்காளர்களின் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,39,328 7,23,044 70 14,62,442 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[8]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 7,45,626 7,31,387 148 14,77,161 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

17வது மக்களவைத் தேர்தல் (2019)தொகு

இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த எச். வசந்தகுமார், பாஜக வேட்பாளரான, பொன். இராதாகிருஷ்ணனை, 2,59,933 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
எச். வசந்தகுமார்
(இறப்பு: 28 ஆகத்து 2020)
  காங்கிரசு 6,27,235 59.83%
பொன். இராதாகிருஷ்ணன்   பாஜக 3,67,302 35.04%
வி. ஜெய்தீன்   நாம் தமிழர் கட்சி 17,069 1.63%
இ. இலக்ஷ்மன்   அமமுக 12,345 1.18%
ஜே. எபினேசர்   மக்கள் நீதி மய்யம் 8,590 0.82%
நோட்டா - - 6,131 0.58%

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவுதொகு

2014 வாக்குப்பதிவு சதவீதம் [8] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பொன். இராதாகிருஷ்ணன் பாஜக 3,72,906
எச். வசந்தகுமார் காங்கிரசு 2,44,244
டி. ஜான்தங்கம் அதிமுக 1,76,239
எப். எம். இராஜரத்தினம் திமுக 1,17,933
ஏ. வி. பெல்லார்மின் சிபிஎம் 35,284
சு. ப. உதயகுமார் எளிய மக்கள் கட்சி 15,314

வாக்குப்பதிவுதொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[9] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [8] வித்தியாசம்
64.99% 67.69% 2.70%

15வது மக்களவைத் தேர்தல் (2009)தொகு

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை, 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஹெலன் டேவிட்சன் திமுக 3,20,161
பொன். இராதாகிருஷ்ணன் பாஜக 2,54,474
பெல்லார்மின் சிபிஎம் 85,583
ஆஸ்டின் தேமுதிக 68,472
சிவகாமி பகுஜன் சமாஜ் கட்சி 6,400

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு