ஜெ. ஹெலன் டேவிட்சன்
ஜெ. ஹெலன் டேவிட்சன் (J. Helen Davidson) 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] ஒரு ஆசிரியரான இவர், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும், கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.[2] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் 1993 இல் டேவிட்சனை மணந்தார். ஹெலன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு இவரது குடும்பம் முக்கியப் பங்காற்றியது.
ஜெ. ஹெலன் டேவிட்சன் | |
---|---|
[[ இந்தியா நாடாளுமன்றம்]] கன்னியாகுமரி | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | ஏ. வி. பெல்லார்மின் |
பின்னவர் | பொன். இராதாகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சூலை 1971 |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | டேவிட்சன் |
வாழிடம் | நாகர்கோவில் |
முன்னாள் கல்லூரி | புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் |
வேலை | அரசியல்வாதி |
கல்வி
தொகுஹெலன் டேவிட்சன் நாகர்கோவிலில் உள்ள சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். நாகர்கோவில், புனித சிலுவை கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதும், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[3]