தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

← 2004 மே 13, 2009 2014 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  Flag DMK.svg Flag of AIADMK.svg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 27 12
மாற்றம் -12 +12
மொத்த வாக்குகள் 12,929,043 11,326,035
விழுக்காடு 42.54% 37.27%
மாற்றம் -14.86% +2.43%

முந்தைய இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

பின்புலம்தொகு

2009ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. 2004 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐந்தாண்டுகள் நீடித்தது. ஆனால் தமிழகத்தில் அக்கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறிவிட்டன. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது. 2008ல் இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறின. 2009ல் தேர்தல் தேதி நெருங்கியபின் பாமக வெளியேறிவிட்டது. இக்கட்சிகள் அதிமுக தலைமையிலான மூன்றாவது முன்னணியில் இணைந்தன. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எஞ்சியிருந்தன. நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்து போட்டியிட்டது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, சுப்ரமணியன் சாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஏழு சிறிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நான்காம் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்ததால் ஈழப் போர் இத்தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்தது.

முடிவுகள்தொகு

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 18 அதிமுக 9 தேமுதிக 0
காங்கிரசு 8 மதிமுக 1 பாஜக 0
விடுதலைச் சிறுத்தைகள் 1 சிபிஐ 1
சிபிஎம் 1
பாமக 0
மொத்தம் (2009) 27 மொத்தம் (2009) 12 மொத்தம் (2009) 0
மொத்தம் (2004) 39 மொத்தம் (2004) 0 மொத்தம் (2004) 0

தமிழக அமைச்சர்கள்தொகு

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள்தொகு

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ப. சிதம்பரம் காங்கிரசு சிவகங்கை உள்துறை
மு. க. அழகிரி திமுக மதுரை உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்
தயாநிதி மாறன் திமுக மத்திய சென்னை நெசவு
ஆ. ராசா திமுக நீலகிரி தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
ஜி. கே. வாசன் காங்கிரசு மாநிலங்களவை உறுப்பினர் கப்பல் போக்குவரத்து

இணை அமைச்சர்கள்தொகு

அமைச்சர் கட்சி தொகுதி துறை
எஸ். எஸ். பழனிமாணிக்கம் திமுக தஞ்சாவூர் நிதி
துரைசாமி நெப்போலியன் திமுக பெரம்பலூர் சமூகநீதி
எஸ். ஜெகத்ரட்சகன் திமுக அரக்கோணம் தகவல் மற்றும் தொலைதொடர்பு

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு