அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

இந்திய அரசியல் கட்சி
(சமத்துவ மக்கள் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் திரைப்பட நடிகர் சரத் குமார் அவர்களால் ஆகஸ்ட் 31, 2007 தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி அப்துல் கலாம், காமராஜர் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
தலைவர்சரத்குமார்
நிறுவனர்சரத்குமார்
தொடக்கம்ஆகஸ்ட் 31, 2007
தலைமையகம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.46, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600017
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

2011 தேர்தல் தொகு

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.[1] பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 31 ஆகத்து 2007 அன்று தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.[2][3] தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்.[4]

மேற்கோள்கள் தொகு