ஜி. கே. வாசன்

இந்திய அரசியல்வாதி

ஜி. கே. வாசன் (பிறப்பு: டிசம்பர் 28, 1964) தமிழ்நாட்டு அரசியல்வாதி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார்.

ஜி. கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரசு
தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-12-28)28 திசம்பர் 1964
சுந்தரபெருமாள் கோவில்,தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு
துணைவர்சுனிதா
பிள்ளைகள்பிரனாவ் கருப்பையா
வாழிடம்சென்னை
கல்விபி.ஏ. நிருவன செயலியல்
இணையத்தளம்www.gkvasan.net

குடும்பம்

தொகு

ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார்.

காங்கிரஸ் கட்சியில்

தொகு

தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மறுதொடக்கம்

தொகு

2014 நாடாளமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜி. கே. வாசன் காங்கிரசுடன் இணைத்த தனது தந்தை ஜி. கே. மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை 2014 நவம்பர் 28இல் த‌.மா.கா கட்சியை மீண்டும் தொடங்கினார்

திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._வாசன்&oldid=3943660" இலிருந்து மீள்விக்கப்பட்டது