தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (Thanjavur Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 30வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்13,40,050
சட்டமன்றத் தொகுதிகள்167. மன்னார்குடி
173. திருவையாறு
174. தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு
176. பட்டுக்கோட்டை
177. பேராவூரணி

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் ஆனது, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன. அதே போன்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும், பொது தொகுதிகளாகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. மன்னார்குடி
  2. திருவையாறு
  3. தஞ்சாவூர்
  4. ஒரத்தநாடு
  5. பட்டுக்கோட்டை
  6. பேராவூரணி

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

இதுவரை இத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1952 இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரசு
1957 இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரசு
1962 வைரவத்தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1967 கோபாலர் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 எஸ்.டி.சோமசுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 எஸ்.டி.சோமசுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1979(இடைத்தேர்தல்) சி. சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1980 சி. சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 சி. சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 சி. சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1991 கி. துளசியா வாண்டையார் இந்திய தேசிய காங்கிரசு
1996 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1998 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1999 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
2004 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
2009 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 கு. பரசுராமன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 எஸ். எஸ். பழனிமாணிக்கம்[1] திராவிட முன்னேற்றக் கழகம்
2024 ச. முரசொலி திராவிட முன்னேற்றக் கழகம்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் பழனிமாணிக்கம், மதிமுகவின் துரை பாலகிருட்டிணனை, 101,787 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பழனிமாணிக்கம் திமுக 4,08,343
துரை பாலகிருட்டினன் மதிமுக 3,06,556
பி. இராமநாதன் தேமுதிக 63,852
எசு. சரவணன் பகுஜன் சமாஜ் கட்சி 5,811
முருகராஜ் சுயேட்சை

9,805

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கு. பரசுராமன் அதிமுக 5,10,307
த. ரா. பாலு திமுக 3,66,188
கருப்பு முருகானந்தம் பா.ஜ.க 58,521
கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரசு 30,232

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
76.63% 75.49% 1.14%

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், தமிழ் மாநில காங்கிரசு கட்சி வேட்பாளரான, நடராஜனை 3,68,129 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
எஸ். எஸ். பழனிமாணிக்கம்   திமுக 5,357 5,88,978 55.6%
நடராஜன் த.மா.கா 432 2,20,849 20.85%
முருகேசன்   அமமுக 453 1,02,871 9.71%
கிருஷ்ணகுமார்   நாம் தமிழர் கட்சி 184 57,924 5.47%
செல்வராஜ் சுயேட்சை 40 28,274 2.67%
சம்பத் இராமதாஸ்   மக்கள் நீதி மய்யம் 102 23,477 2.22%
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தஞ்சாவூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ச. முரசொலி 502245
தேமுதிக சிவநேசன் 182662
பா.ஜ.க கருப்பு முருகானந்தம் 170613
நோட்டா நோட்டா 12833
வாக்கு வித்தியாசம் 1501266
பதிவான வாக்குகள் 1024949

மேற்கோள்கள்

தொகு
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "தமிழகம், புதுச்சேரி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024". தின மலர் (05 சூன் 2024) 73 (273): pp. 20. 

வெளியிணைப்புகள்

தொகு