சி. சிங்காரவடிவேல்

சி. சிங்காரவடிவேல் (7 மார்ச், 1937 - 31 சனவரி 2022)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக,லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

இவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டாரத்தில் எடமேலையூர் கிராமத்தில் எஸ்.கே. சிவானந்தம் சாளுவர் அவர்களுக்கு மகனாக 1937 மார்ச் 17 இல் பிறந்தார். தமிழக அரசு 2012 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி கௌரவித்தது.[5][6]

இறப்பு

தொகு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, சனவரி 31, 2022 அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "SINGARAVADIVEL, SHRI SIVANANDAM".
  2. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  3. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  4. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  5. "மக்களவை உறுப்பினர்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2022/feb/01/former-lok-sabha-member-dies-of-corona-infection-3784006.html. 
  6. "மக்களவை உறுப்பினர்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/762950-i-am-saddened-by-the-news-of-the-death-of-senior-congress-leader-singaravadivel-cm-stalin-s-condolences-1.html. 
  7. "முன்னாள் காங்கிரஸ் எம்.பி காலமானார்.. தமிழக அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி !!!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிங்காரவடிவேல்&oldid=4095373" இலிருந்து மீள்விக்கப்பட்டது