கொரோனா (Corona) என்பது சூரியன் மற்றும் புவி உட்பட்ட ஏனைய வானுலகங்களை சூழவுள்ள பிளாசுமா வகை ஆகும். இது விண்ணில் பல கோடி கிலோமீட்டர்கள் வரை பரந்துள்ளது. இதனை முழுமையான சூரிய கிரகணத்தின் போது இலகுவாகக் காணலாம். ஆனாலும் இதனை ஒளிவளைய வரைவி (coronograph) மூலமும் பார்க்கலாம். கொரோனா என்ற சொல் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான κορώνη (கொரோனி, மலர்வளையம், மலர்மாலை) என்ற சொல்லில் இருந்து பிறந்தது.

பூரண சூரிய கிரகணத்தின் போது வெற்றுக் கண்களுக்குத் தென்படும் சூரியனின் கொரோனா

கொரோனா பல வகைக் கதிர்களை வெளியிடும். சூரியனின் கொரோனா உயர் வெப்பநிலையில் காணப்படுவதால் இது அசாதாரண நிறமாலை பண்புகளைக் கொண்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5800 K ஆகக் காணப்படும் போது அதன் மேல் காணப்படும் கொரோனாவின் வெப்பநிலை 1000000 K தொடக்கம் 3000000 K வரை உள்ளது (சிலவேளைகளில் 10000000K வரை உயரலாம்).[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Aschwanden, M. J. (2004). Physics of the Solar Corona. An Introduction. Praxis Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-22321-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரோனா&oldid=3418037" இலிருந்து மீள்விக்கப்பட்டது