திருவோணம் (சட்டமன்றத் தொகுதி)
திருவோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | துரை கோவிந்தராசன் | அதிமுக | 23779 | 29.06 | புலவர் டி. தோலப்பன் | திமுக | 21566 | 26.36 |
1980 | என். சிவஞானம் | காங்கிரசு | 44748 | 49.36 | துரை கோவிந்தராசன் | அதிமுக | 44686 | 49.29 |
1984 | என். சிவஞானம் | காங்கிரசு | 46777 | 48.25 | எம். இராமச்சந்திரன் | திமுக | 35707 | 36.83 |
1989 | மா. இராமச்சந்திரன் | திமுக | 42479 | 37.17 | கே. தங்கமுத்து | அதிமுக (ஜெ) | 29730 | 26.01 |
1991 | கே. தங்கமுத்து | அதிமுக | 75141 | 64.73 | எம். இராமச்சந்திரன் | திமுக | 40173 | 34.61 |
1996 | மா. இராமச்சந்திரன் | திமுக | 72403 | 57.36 | கே. தங்கமுத்து | அதிமுக | 40853 | 32.37 |
2001 | சி. இராசேந்திரன் | அதிமுக | 67094 | 52.21 | எம். இராமச்சந்திரன் | திமுக | 55871 | 43.48 |
2006 | டி. மகேசு கிருசுணசாமி | திமுக | 69235 | --- | கே. தங்கமுத்து | அதிமுக | 67430 | --- |
- 1977ல் காங்கிரசின் வையாபுரி வன்னியர் 17004 (20.78%) , சுயேச்சை தங்கராசு 9987 (12.21%) & ஜனதாவின் கலியமூர்த்தி 9490 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.
- 1984ல் இந்திய காங்கிரசின்(ஜெ) கே. தங்கமுத்து 12601 (13.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் நாச்சி வரதராசன் 23124 (20.23%) & அதிமுக (ஜா) அணியின் துரை கோவிந்தராசன் 17522 (15.33%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். சிவகுமார் 8488 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.