அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

'எம்.ஜி.ஆர்.' அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட, இந்திய அரசியல் கட்சி.
(அதிமுக (ஜெ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (மொ.பெ. All India Anna Dravidian Progressive Federation; சுருக்கம் அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ஒரு இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும். கட்சியின் பொருளாளராக கணக்கு கேட்டதற்காக மு. கருணாநிதி அவரை கட்சியில் இருந்து நீக்கியதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த பிரிவாக 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களால் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி இது. சி. என். அண்ணாதுரையின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆரால் அன்னியம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவும், இந்தியாவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிஅஇஅதிமுக
நிறுவனர்எம். ஜி. இராமச்சந்திரன்
பொதுச் செயலாளர்எடப்பாடி கே. பழனிசாமி
அவைத் தலைவர்அ. தமிழ் மகன் உசேன்
நாடாளுமன்ற குழுத்தலைவர்மு. தம்பிதுரை
மாநிலங்களவைத் தலைவர்மு. தம்பிதுரை
தொடக்கம்17 அக்டோபர் 1972
(50 ஆண்டுகள் முன்னர்)
 (1972-10-17)
பிரிவுதிராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை,
226, அவ்வை சண்முகம் சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600014, தமிழ்நாடு, இந்தியா
செய்தி ஏடுநமது அம்மா (தினசரி நாளிதழ்)
நியூஸ் ஜெ (தொலைக்காட்சி அலைவரிசை)
மாணவர் அமைப்புஅஇஅதிமுக மாணவரணி
இளைஞர் அமைப்புஎம்.ஜி.ஆர். இளைஞரணி
பெண்கள் அமைப்புஅஇஅதிமுக மகளிரணி
தொழிலாளர் அமைப்புஅண்ணா தொழிற்சங்க பேரவை
விவசாயிகள் அமைப்புஅஇஅதிமுக விவசாயப் பிரிவு
உறுப்பினர்Green Arrow Up.svg 10 மில்லியன் உறுப்பினர்கள்
கொள்கை
அரசியல் நிலைப்பாடுமத்திய-இடது[4]
நிறங்கள்     பச்சை
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[5]
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
4 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
63 / 234
தேர்தல் சின்னம்
இரட்டை இலை
கட்சிக்கொடி
AIADMK Official Flag.png
இணையதளம்
www.aiadmk.com

9 பிப்ரவரி 1989 முதல் 5 டிசம்பர் 2016 வரை, அஇஅதிமுக பொதுச் செயலாளராக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா (அம்மா) தலைமை வகித்தார். அவர் கட்சியின் தாயாக அவரது தொண்டர்களால் போற்றப்பட்டார். மேலும் 2016இல் அவர் இறக்கும் வரை தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். 21 ஆகஸ்ட் 2017 முதல் 23 ஜூன் 2022 வரை, இக்கட்சி இரட்டை தலைமையின் கீழ் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முறையே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் தலைமை வகித்தனர்.

11 ஜூலை 2022 முதல், அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தலைமை வகித்து வருகிறார்.[6]

கட்சியின் தலைமை அலுவலகமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான வி.என். ஜானகி இராமச்சந்திரன் அவர்களால் 1986ஆம் ஆண்டு கட்சிக்கு அக்கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

வரலாறு

அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன், இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[7] இக்கட்சி, பின்னர், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (அ.இ.அ‌.தி.மு.க.) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். காலம்

டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன்
கழக நிறுவனத் தலைவர்

எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[8] அதைத் தொடர்ந்து, 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[9] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது, பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கொடியின் வரலாறு

அ.தி.மு.க.வின் துவக்க காலக் கொடியாக, தாமரைச் சின்னமும், அதன் பின்னால் கருப்பு சிவப்பு நிறங்களும் இருந்தன.[10] மதுரையில், ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972ஆம் ஆண்டு அ.திமு.க.வின் கொடி ஏற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்[சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சிக் கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு, எம்.ஜி.ஆர்., அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து, அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை, அண்ணா தோற்றுவித்த தி.மு.க.வின் கருப்பு, சிவப்பு கொடியோடு இணைத்து, அண்ணா தி.மு.க.வின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு, நடிகர் பாண்டு, அ.தி.மு.க. கொடியை உருவாக்கினார்.[11][12]

பெயர் மாற்றம்

'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரை, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று எம்.ஜி.ஆர். மாற்றினார். இதை, கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர். 'பொதுச்செயலாளர்' பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த பின், எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன், திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் தலைமை தாங்குவது? என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆர் மனைவி வி. என். ஜானகி, தலைவராகவும்,முதல்வராகவும் ஆனார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய பிரமுகர் ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அ.இ.அ.தி.மு.க.வில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும், ஜானகியை ஆதரித்தார்.

புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தி.மு.க., இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே, சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். வி.என்.ஜானகி, அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக, ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.

சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால், தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து, மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அ.தி.மு.க. கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே, இரு தொகுதிகளிலும் வென்றது.[13] பின்பு ஜெயலலிதா தலைமையில், 1991, 2001, 2011, 2016 தேர்தல்களில் வென்று, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவைத் தேர்தலையும், 2016 சட்டமன்றத் தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.

ஜெயலலிதா காலம்

டாக்டர் ஜெ. ஜெயலலிதா
கழக முன்னாள் பொதுச் செயலாளர்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதலமைச்சராக, பதவியிலிருக்கும் போது, 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[14] அதற்குப் பின்னர், 29 டிசம்பர் 2016 அன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை தேர்ந்தெடுத்தனர்.[15][16][17]

5 பிப்ரவரி 2017 அன்று, அ.இ.அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18][19] இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[20] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை, ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னைக் கட்டாயப்படுத்தியதால், பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாகத் தெரிவித்தார்.[21] இதனைத் தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க‌.வின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அ.இ.அ.தி.மு‌.க. பிரிந்தது. ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால், அ.தி.மு.க.வில் இருந்து, ஓ.பிஎ.ஸ். ஆதரவாளர்கள் அனைவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.

பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால், ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி, எடப்பாடி க. பழனிசாமி யை சட்டமன்றக் குழுத்தலைவராகவும், டி.டி.வி. தினகரனை, துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதன்பின் சசிகலாவிற்கு ஆதவராக, 18 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை விசாரித்து, பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு, அ.தி.மு.க. சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கினார், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின. 2019 மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடந்தது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அந்த நபர்கள் 22 இடங்களிலும் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்டனர். ஆனால் அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தது; அமமுகவினர் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில், அதே தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக போட்டியிட்டது, திமுகவின் 133 இடங்களுடன் ஒப்பிடும்போது 66 இடங்களை வென்றது மற்றும் திமுக தலைமையிலான ஆட்சியில் இருந்து தள்ளப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. தேர்தலுக்குப் பிறகு, சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கட்சியாக அதிமுக உருவெடுத்தது. 11 மே 2021 அன்று, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 14 ஜூன் 2021 அன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டனர்.

கட்சி தலைவர்களின் பட்டியல்

தலைவர்கள்

எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பொறுப்பேற்ற நாள் வெளியேறிய நாள் மொத்த காலம்
1   எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
17 அக்டோபர் 1972 24 டிசம்பர் 1987 15 ஆண்டுகள், 68 நாட்கள்

பொதுச் செயலாளர்கள்

எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பொறுப்பேற்ற நாள் வெளியேறிய நாள் மொத்த காலம்
1   எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
17 அக்டோபர் 1972 22 ஜூன் 1978 6 ஆண்டுகள், 316 நாட்கள்
17 அக்டோபர் 1986 24 டிசம்பர் 1987
2   இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
23 ஜூன் 1978 10 ஜூன் 1980 3 ஆண்டுகள், 24 நாட்கள்
2 ஜனவரி 1988 7 பிப்ரவரி 1989
3   ப. உ. சண்முகம்
(1924–2007)
11 ஜூன் 1980 13 மார்ச் 1985 4 ஆண்டுகள், 275 நாட்கள்
4   எஸ். இராகவானந்தம்
(1917–1999)
14 மார்ச் 1985 16 அக்டோபர் 1986 1 ஆண்டு, 216 நாட்கள்
5   ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
9 பிப்ரவரி 1989 5 டிசம்பர் 2016 27 ஆண்டுகள், 300 நாட்கள்
தற்காலிகம்   வி. கே. சசிகலா
(1954–)
31 டிசம்பர் 2016 17 பிப்ரவரி 2017 48 நாட்கள்
இடைக்காலம்   எடப்பாடி கே. பழனிசாமி
(1954–)
11 ஜூலை 2022 பதவியில் 0 ஆண்டுகள், 254 நாட்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பொறுப்பேற்ற நாள் வெளியேறிய நாள் மொத்த காலம்
1   ஒருங்கிணைப்பாளர்
ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
21 ஆகஸ்ட் 2017 23 ஜூன் 2022 4 ஆண்டுகள், 306 நாட்கள்
  இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி கே. பழனிசாமி
(1954–)

சட்டமன்ற தலைவர்கள்

மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பட்டியல்

எண் உருவப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
இலாக்கா பதவிக்காலம் தொகுதி
(அவை)
பிரதமர்
பொறுப்பேற்ற நாள் வெளியேறிய நாள் மொத்த காலம்
1   சத்தியவாணி முத்து
(1923–1999)
சமூக நலத்துறை அமைச்சர் 19 ஆகஸ்ட் 1979 23 டிசம்பர் 1979 126 நாட்கள் தமிழ்நாடு
(மாநிலங்களவை)
சரண் சிங்
2   அ. பாலா பஜானோர்
(1935–2013)
பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் புதுச்சேரி
(மக்களவை)
3   இரா. முத்தையா
(1945–2022)
மேற்பரப்பு போக்குவரத்து அமைச்சர் 19 மார்ச் 1998 8 ஏப்ரல் 1998 20 நாட்கள் பெரியகுளம்
(மக்களவை)
அடல் பிகாரி வாஜ்பாய்
4   மு. தம்பிதுரை
(1947–)
சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சர் 19 மார்ச் 1998 8 ஏப்ரல் 1999 1 ஆண்டு, 20 நாட்கள் கரூர்
(மக்களவை)
மேற்பரப்பு போக்குவரத்து அமைச்சர் 8 ஏப்ரல் 1998 1 ஆண்டு

அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.

எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.

வரிசை எண் பெயர் தொடக்கம் முடிவு முறை கட்சி
1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க
2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க
3 இரா. நெடுஞ்செழியன் 16 நவம்பர் 1984 9 பிப்ரவரி 1985 1 அ.இ.அ.தி.மு.க
4 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க
5 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க
6 வி. என். ஜானகி 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி)
7 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க
8 ஜெ. ஜெயலலிதா[22] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க
9 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க
10 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[22] அ.இ.அ.தி.மு.க
11 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[22] அ.இ.அ.தி.மு.க
12 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க
13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க
14 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 5 திசம்பர், 2016 6 அ.இ.அ.தி.மு.க
15 ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 பிப்ரவரி 16, 2017 3 அ.இ.அ.தி.மு.க
16 எடப்பாடி க. பழனிசாமி பிப்ரவரி 16, 2017 6 மே,2021 1 அ.இ.அ.தி.மு.க

தேர்தல் செயல்திறன்

இந்திய பொதுத் தேர்தல்கள்

மக்களவை தேர்தல்கள்
ஆண்டு மக்களவை கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் சதவீத மாற்றம் மொத்த வாக்குகள் விளைவு
1977 6வது எம். ஜி. இராமச்சந்திரன் 21
18 / 543
  18 2.90%   5,480,378 அரசு
1980 7வது 24
2 / 543
  16 2.36%   0.54% 4,674,064 எதிர்க்கட்சி
1984 8வது 12
12 / 543
  10 1.69%   0.67% 3,968,967 அரசு
1989 9வது ஜெ. ஜெயலலிதா 11
11 / 543
  1 1.50%   0.19% 4,518,649 எதிர்க்கட்சி
1991 10வது 11
11 / 543
  1.62%   0.12% 4,470,542 அரசு
1996 11வது 10
0 / 543
  11 0.64%   0.98% 2,130,286 தோல்வி
1998 12வது 23
18 / 543
  18 1.83%   1.19% 6,731,550 அரசு
1999 13வது 29
10 / 543
  8 1.93%   0.10% 7,046,953 எதிர்க்கட்சி
2004 14வது 33
0 / 543
  10 2.19%   0.26% 8,547,014 தோல்வி
2009 15வது 23
9 / 543
  9 1.67%   0.52% 6,953,591 மற்றவை
2014 16வது 40
37 / 543
  28 3.31%   1.64% 18,111,579
2019 17வது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி 22
1 / 543
  36 1.37%   1.94% 8,307,345 அரசு

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்[23]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 200
130 / 234
  130 30.36%   5,194,876 அரசு
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 177
129 / 234
  1 38.75%   8.39% 7,303,010 அர்சு
1984 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 155
132 / 234
  3 37.03%   1.72% 8,030,809 அரசு
1989 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 202
29 / 234
  103 21.77%   15.26% 5,247,317 எதிரணி
1991 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 168
164 / 234
  135 44.39%   22.62% 10,940,966 அரசு
1996 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 168
4 / 234
  160 21.47%   22.92% 5,831,383 மற்றவை
2001 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 141
132 / 234
  128 31.44%   9.97% 8,815,387 அரசு
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 188
61 / 234
  71 32.64%   1.20% 10,768,559 எதிரணி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 165
150 / 234
  89 38.40%   5.76% 14,150,289 அரசு
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 234
135 / 234
  14 40.77%   2.37% 17,616,266 அரசு
2021 தேர்தல் ஒபிஎஸ்-இபிஎஸ் 191
66 / 234
  69 33.29%   7.48% 15,390,974 எதிரணி
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்[24]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1974 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 21
12 / 30
  12 27.83%   60,812 அரசு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 27
14 / 30
  2 30.96%   3.13% 69,873 அரசு
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 18
0 / 30
  14 18.60%   12.36% 45,623 தோல்வி
1985 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 10
6 / 30
  6 15.75%   2.85% 47,521 அரசு
1990 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 13
3 / 30
  3 18.17%   2.42% 76,337 எதிரணி
1991 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
6 / 30
  3 17.34%   0.83% 67,792 அரசு
1996 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
3 / 30
  3 12.53%   4.81% 57,678 எதிரணி
2001 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 20
3 / 30
மாற்றங்கள் இல்லை 12.56%   0.03% 59,926 அரசு
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 18
3 / 30
மாற்றங்கள் இல்லை 16.04%   3.48% 90,699 எதிரணி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
5 / 30
  2 13.75%   2.29% 95,960 அரசு
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 30
4 / 30
  1 16.82%   3.07% 134,597 எதிரணி
2021 தேர்தல் ஒபிஎஸ்-இபிஎஸ் 5
0 / 30
  4 4.14%   12.68% 34,623 தோல்வி
கருநாடக சட்டமன்றத் தேர்தல்கள்[25]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1978 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 7
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.18%   22,310 தோல்வி
1983 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 1
1 / 224
  1 0.13%   0.05% 16,234 அரசு
1989 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 1
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.18%   0.05% 32,928 அரசு
1994 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 4
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.24%   0.06% 50,696 எதிரணி
1999 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 13
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.18%   0.06% 39,865 அரசு
2004 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 2
0 / 224
  1 0.07%   0.11% 16,737 தோல்வி
2008 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 7
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.03%   0.04% 9,088 தோல்வி
2013 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 5
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.03% மாற்றங்கள் இல்லை 10,280 தோல்வி
2018 தேர்தல் ஒபிஎஸ்-இபிஎஸ் 3
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.01%   0.02% 2,072 தோல்வி
கேரள சட்டமன்றத் தேர்தல்கள்[26]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 2
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.02%   2,114 தோல்வி
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 1
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.00%   0.02% 224 தோல்வி
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 29
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.12%   0.12% 19,078 தோல்வி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 4
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.01%   0.11% 2,448 தோல்வி
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 7
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.17%   0.16% 33,440 தோல்வி
2021 தேர்தல் ஒபிஎஸ்-இபிஎஸ் 1
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.05%   0.12% 10,376 தோல்வி
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள்[27]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1978 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 9
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.19%   38,691 தோல்வி
1994 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 2
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.05%   0.14% 14,251 தோல்வி
1999 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 5
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.02%   0.03% 7,281 தோல்வி

சின்னம் முடக்கம்:அஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது. பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.\

மேற்கோள்கள்

  1. Subramaniam, T.S (29 August 2011), "Palani excavation triggers fresh debate", The Hindu, Chennai, India, 8 September 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 8 October 2015 அன்று பார்க்கப்பட்டது
  2. "Immigration and Refugee Board of Canada". justice.gov. Responses to Information Requests. 20 May 2016. 15 மார்ச் 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. Geetha, V. "The Dravidian consensus". india-seminar.com.
  4. Ogden, Chris (20 June 2019) (in en). A Dictionary of Politics and International Relations in India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-253915-1. https://books.google.com/books?id=hksIEAAAQBAJ. "All India Anna Dravida Munnetra Kazhagam (Tamil: 'All India Anna Dravidian Progress Federation') A political party. It was established in 1972..." 
  5. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 24 அக்டோபர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. "AIADMK general council anoints Edappadi K Palaniswami as party interim general secretary". The Times of India. 11 July 2022. https://timesofindia.indiatimes.com/city/chennai/aiadmk-general-council-appoints-edappadi-k-palaniswami-as-party-interim-general-secretary/articleshow/92794556.cms?from=mdr. 
  7. http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6561928.ece?homepage=true
  8. Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545. 
  9. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009
  10. When MGR arrived in Madurai to launch ADMK
  11. http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/10/அ.தி.மு.க.-கொடியை-வடிவமைத்த-நடி/article3424494.ece அ.தி.மு.க. கொடியை வடிவமைத்த பாண்டு.
  12. The man who designed the ‘Two Leaves’ symbol
  13. http://www.valaitamil.com/political-tamilnadu-election-history-1989th-tamil-nadu-assembly-election-articles103-166-6599-0.html
  14. "Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time". தி இந்து. 6 டிசம்பர் 2016. 6 டிசம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  15. "அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்". தமிழ் இந்து. 29 திசம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. Chinnamma Sasikala named AIADMK General Secretary
  17. ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்
  18. "A roller-coaster ride: After party, Sasikala to take full control of government". டைம்சு ஆப் இந்தியா. பெப்ரவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Sasikala appointed Legislative Party leader of AIADMK, set to be Tamil Nadu chief minister". இந்தியன் எக்சுபிரசு. பெப்ரவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  20. "தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா". தி இந்து (தமிழ்). 6 பிப்ரவரி 2017. 6 பிப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  21. "OPS revolts, says he was forced to quit". தி இந்து. 8 பிப்ரவரி 2017. 12 பிப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  22. 22.0 22.1 22.2 On செப்டம்பர் 21, 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as Chief Minister there has been a clear infringement of a Constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as Chief Minister was declared null and invalid in retrospect. Therefore, technically, she was not the Chief Minister in the period between மே 14, 2001 and செப்டம்பர் 21, 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM பரணிடப்பட்டது 2004-11-28 at the வந்தவழி இயந்திரம், full text of the judgment from official Supreme Court site பரணிடப்பட்டது 2006-06-27 at the வந்தவழி இயந்திரம்).
  23. "Tamil Nadu Assembly Election Results". Election Commission of India. 15 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  24. "Puducherry Assembly Election Results". Election Commission of India. 15 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  25. "Karnataka Assembly Election Results". Election Commission of India. 15 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  26. "Kerala Assembly Election Results". Election Commission of India. 15 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  27. "Andhra Pradesh Assembly Election Results". Election Commission of India. 15 November 2020 அன்று பார்க்கப்பட்டது.