திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொருளாளராக உள்ளார். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் எம்.ஏ. வரை படித்துள்ளார்.[1] 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்..[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

திண்டுக்கல் சீனிவாசன்
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்
பதவியில்
23 மே 2016 – 6 மே 2021
முன்னவர் எடப்பாடி க. பழனிசாமி
பின்வந்தவர் கா. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2016
முன்னவர் கே. பாலபாரதி
தொகுதி திண்டுக்கல்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 ஜூலை 2022
நியமித்தவர் எடப்பாடி க. பழனிசாமி
முன்னவர் ஓ. பன்னீர்செல்வம்
பதவியில்
14 பிப்ரவரி 2017 – 21 ஆகத்து 2017
முன்னவர் ஓ. பன்னீர்செல்வம்
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
பதவியில்
31 மார்ச் 2000 – 20 ஜூலை 2006
நியமித்தவர் ஜெ. ஜெயலலிதா
முன்னவர் சேடபட்டி இரா. முத்தையா
பின்வந்தவர் டி. டி. வி. தினகரன்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 ஏப்ரல் 1948 (1948-04-01) (அகவை 75)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அதிமுக

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு