கே. பாலபாரதி
கே. பாலபாரதி (K. Balabharathi) ஒரு இந்திய பெண் அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் சார்பாக 2006 முதல் 2016 வரை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பி.எஸ்.சி., பட்டதாரி ஆவார்.
கே. பாலபாரதி | |
---|---|
![]() | |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 மே 2006 – 14 மே 2016 | |
முன்னையவர் | கே. நாகலட்சுமி |
பின்னவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
தொகுதி | திண்டுக்கல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
துணைவர் | திருமணம் ஆகாதவர் |
அரசியல் வாழ்க்கை
தொகுகட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருந்தார். தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்[1].
பொது வாழ்க்கை
தொகுபிரச்சனைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்
தொகு2006, 2011 ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-28. Retrieved 2022-01-25.
- ↑ http://www.tn.gov.in/ta/government/mlas/18198